Skip to main content

Posts

ரயில் ஓசி பயணம் செய்யும் மாநில போலீஸ் மீது நடவடிக்கை ரயில்வே சுற்றறிக்கை...

ரயில்களில் எவ்வித ஆவணமும் இன்றி  ஓசியில் பயணிக்கும் மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகம் அந்தந்த மண்டல ரயில்வே வணிக மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே பயணிகள் ரயில்களில் நூற்றுக்கு 10 சதவீதம் பேர் பயண சீட்டின்றி பயணித்து வருகின்றனர். அதேநேரத்தில் ரயில்களில் ராணுவம், காவல்துறை, துணை ராணுவப்படையினர், ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஆகியோருக்கு தொழில்ரீதியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாநில போலீசார் அவ்வபோது குற்றவாளிகளை பிடித்து வருதல், கோர்ட் பணி உள்ளிட்ட பணிகளுக்காக ரயில்களில் பயணிக்க உயர்அதிகாரிகளால் அனுதிச்சீட்டு வழங்கப்படுகிறது. அந்த அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட காவலரின் அனைத்து விவரங்களுடன், பயணிப்பதற்கான காரணமும் கூறப்பட்டிருக்கும். இந்நிலையில், இச்சலுகையை போலீசார் சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், வணிக மேலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், 'அந்தந்த மாநில போலீசார் ரயில்களில் பயணிக்கும் போது உரிய சீருடையுடன் அடையாள அட்டை, பணி அனுமதி ச
Recent posts

டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் - வெறும் கண்ணால் பார்க்க கூடாது

‘ சூரியன், நிலவு, பூமி என மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக, டிசம்பர் 26ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது.  இதுபற்றி முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், 'டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8 மணியில் இருந்து 3 மணி நேரம் சூரிய கிரகரணம் தெரியும். கோவை தெளிவாகவும் சென்னையில் பகுதி அளவிலும் கிரகணம் தெரியும். அவினாசி, ஈரோடு, கரூர், சிவகங்கை உள்ளிட்ட10 இடங்களில் தெளிவான சூரிய கிரகணம் தெரியும்.  சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகணத்தின்போது உணவு உட்கொள்ளலாம், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது' என்றார். சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு  ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துவருகிறது.

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம்- பற்றி எரியும் மே.வங்கம்... இணைய சேவைகள் துண்டிப்பு

                    குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம்- பற்றி எரியும் மே.வங்கம்... இணைய சேவைகள் துண்டிப்பு. கொல்கத்தா: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் படுதீவிரமடைந்துள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் பல பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்து மேற்கு வங்கத்திலும் குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. இம்மாநிலத்தில் ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒடிஷா, மேற்குவங்கம் செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. வடக்கு 24 பர்கானா, ஹவுரா, முர்சிதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் சாலைகளில் வாகனப்போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் இணையசேவைகளை துண்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாமிலும் திங்கள்கிழமை வரை 10 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிக்க

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவு தெரிவித

திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்

                     திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.100-க்கு விற்பனை. எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சம் டன் வெங்காயத்தில் (பெரிய வெங்காயம்) முதல்கட்டமாக 30 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்து சோ்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த பருவமழையால் வெங்காய பயிா்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்தது. இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இந்திய குடியுரிமை இல்லை? ராஜ்நாத் விளக்கம்

டெல்லி: இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது, இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது. மோடி அரசு ஒப்புதல் ஆனால் அதேநேரம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை திர