Skip to main content

Posts

Showing posts from December, 2019

ரயில் ஓசி பயணம் செய்யும் மாநில போலீஸ் மீது நடவடிக்கை ரயில்வே சுற்றறிக்கை...

ரயில்களில் எவ்வித ஆவணமும் இன்றி  ஓசியில் பயணிக்கும் மாநில போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி ரயில்வே நிர்வாகம் அந்தந்த மண்டல ரயில்வே வணிக மேலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்திய ரயில்வே பயணிகள் ரயில்களில் நூற்றுக்கு 10 சதவீதம் பேர் பயண சீட்டின்றி பயணித்து வருகின்றனர். அதேநேரத்தில் ரயில்களில் ராணுவம், காவல்துறை, துணை ராணுவப்படையினர், ரயில்வே பாதுகாப்புப்படையினர் ஆகியோருக்கு தொழில்ரீதியான சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மாநில போலீசார் அவ்வபோது குற்றவாளிகளை பிடித்து வருதல், கோர்ட் பணி உள்ளிட்ட பணிகளுக்காக ரயில்களில் பயணிக்க உயர்அதிகாரிகளால் அனுதிச்சீட்டு வழங்கப்படுகிறது. அந்த அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட காவலரின் அனைத்து விவரங்களுடன், பயணிப்பதற்கான காரணமும் கூறப்பட்டிருக்கும். இந்நிலையில், இச்சலுகையை போலீசார் சிலர் தவறாக பயன்படுத்துவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே நிர்வாகம் அனைத்து மண்டல மேலாளர்கள், நிலைய மேலாளர்கள், வணிக மேலாளர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில், 'அந்தந்த மாநில போலீசார் ரயில்களில் பயணிக்கும் போது உரிய சீருடையுடன் அடையாள அட்டை, பணி அனுமதி ச

டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் - வெறும் கண்ணால் பார்க்க கூடாது

‘ சூரியன், நிலவு, பூமி என மூன்றும் நேர் கோட்டில் இருக்கும் போது சூரிய வெளிச்சத்தை நிலவு மறைக்கிறது. பூமியில் இருந்து பார்க்கும் போது சூரியனை நிலவு மறைக்கும் காட்சி தென்படும். சூரியனை முழுவதுமாக நிலவு மறைத்தால் அதுதான் முழு சூரிய கிரகணம். அவ்வகையில் இந்த ஆண்டின் கடைசி கிரகணமாக, டிசம்பர் 26ஆம் தேதியன்று நெருப்பு வளைய சூரிய கிரகணம் என்னும் அரிய சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது.  இதுபற்றி முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் கூறுகையில், 'டிசம்பர் 26ல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் தோன்றுகிறது. காலை 8 மணியில் இருந்து 3 மணி நேரம் சூரிய கிரகரணம் தெரியும். கோவை தெளிவாகவும் சென்னையில் பகுதி அளவிலும் கிரகணம் தெரியும். அவினாசி, ஈரோடு, கரூர், சிவகங்கை உள்ளிட்ட10 இடங்களில் தெளிவான சூரிய கிரகணம் தெரியும்.  சூரிய கிரகணத்தை எப்போதும் வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. கிரகணத்தின்போது உணவு உட்கொள்ளலாம், உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாது' என்றார். சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காக, மாநிலம் முழுவதும் சிறப்பு  ஏற்பாடுகளை தமிழ் நாடு அறிவியல் இயக்கம் செய்துவருகிறது.

குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம்- பற்றி எரியும் மே.வங்கம்... இணைய சேவைகள் துண்டிப்பு

                    குடியுரிமை சட்டம் எதிர்ப்பு போராட்டம்- பற்றி எரியும் மே.வங்கம்... இணைய சேவைகள் துண்டிப்பு. கொல்கத்தா: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் படுதீவிரமடைந்துள்ளதால் மேற்கு வங்க மாநிலத்தில் பல பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு மாநிலங்களைத் தொடர்து மேற்கு வங்கத்திலும் குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம் கொழுந்துவிட்டு எரிகிறது. இம்மாநிலத்தில் ரயில்கள், ரயில் நிலையங்கள், பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து ஒடிஷா, மேற்குவங்கம் செல்லும் பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரலில் இருந்து விஜயவாடா வரை மட்டுமே ரயில்கள் இயக்கப்படுகின்றன. வடக்கு 24 பர்கானா, ஹவுரா, முர்சிதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் இன்று காலை முதல் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதனால் சாலைகளில் வாகனப்போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளன. இதனையடுத்து மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள பகுதிகளில் இணையசேவைகளை துண்டிப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அஸ்ஸாமிலும் திங்கள்கிழமை வரை 10 மாவட்டங்களில் இணைய சேவைகள் துண்டிக்க

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ.

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவு தெரிவித

திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்

                     திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.100-க்கு விற்பனை. எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சம் டன் வெங்காயத்தில் (பெரிய வெங்காயம்) முதல்கட்டமாக 30 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்து சோ்ந்துள்ளது. வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த பருவமழையால் வெங்காய பயிா்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்தது. இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் மத்திய அரசு உத்தரவிட்டது. மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி

குடியுரிமை மசோதாவில் இலங்கை தமிழ் அகதிகளுக்கு மட்டும் ஏன் இந்திய குடியுரிமை இல்லை? ராஜ்நாத் விளக்கம்

டெல்லி: இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். அண்டை இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தலுக்கு உள்ளான இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், சமணர்கள், புத்தர்கள் மற்றும் பார்சிகள் ஆகிய ஆறு மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதை நோக்கமாக கொண்டு குடியுரிமை (திருத்த) மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்கிறது, இந்நிலையில் இலங்கையில் இருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் இந்திய குடியுரிமை வழங்கும் திருத்தம் மசோதாவில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த மசோதா நிறைவேறினாலும் இலங்கையில் இருந்து வந்து தமிழகத்தில் அகதிகளாக வசிக்கும் மக்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்காது. மோடி அரசு ஒப்புதல் ஆனால் அதேநேரம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்காஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தற்போதுள்ள சட்டங்களை திர

கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது

தாம்பரம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தினுள், கூடுதல் குற்றவியல் நீதிமன்றம் இன்று, திறக்கப்பட்டது . இதை, உயர்நீதிமன்ற நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணா, திறந்து வைத்தார். இதில், சென்னை, உயர்நீதிமன்ற நீதிபதி, பவானி சுப்பராயன்,போலீஸ் கமிஷனர், ஏ.கே.,விஸ்வநாதன், சட்டத்துறை அமைச்சர், சி.வி.சண்முகம், கலந்து கொண்டனர். கூடுதல் குற்றவியல் நீதிமன்ற, நீதிபதியாக கே.சுஜாதா பதவியேற்றுக் கொண்டார்.

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறைவேற்றப்பட்ட மூ

உயர் அதிகாரி மனைவியிடம் போனில் பேசிய ஏட்டுக்கு முகத்தில் கும்மாங்குத்து

விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு அதிகாரியாக கோவன அதிகாரி உள்ளார். ஏற்கனவே இதே மாவட்டத்தில் பல இடங்களில் பணியாற்றியவர், ஓய்வுபெறும் நிலையில் கல்லாகட்டும் துறையை தேடி பிடிச்சி வாங்கியிருக்காறாம். புதுவை அருகே  திருசிற்றம்பலம் கூட்டுரோட்டில் வீடு கட்டியுள்ள அவர் குடும்பத்திற்கு தேவையானவற்றை வாங்கித்தரும் பொறுப்பை ஒவ்வொரு செக்போஸ்ட்டிற்கும் பிரித்து கொடுத்துள்ளாராம். காய்கறி, மளிகைசாமான், மீன் என்று வாரந்தோறும் பட்டியல்  போட்டு கொடுத்துள்ளாராம். இந்நிலையில் கிளியனூர் செக்போஸ்ட் ஏட்டை அழைத்து வீட்டுக்கு காய்கறி வாங்கிவைப்பான்னு சொல்லிட்டு அதிகாரி சென்றுவிட்டாராம். காய்கறியோடு நின்றிருந்த காெமடி நடிகர் பெயரைக்கொண்ட அந்த ஏட்டு,  நேரா அதிகாரியின் மனைவிக்கு போன் அடிச்சிட்டு வீட்டுக்கு போயிட்டாராம். மனைவியோ கணவரிடம் பத்தவைக்க, உடனடியாக வந்த அதிகாரி, நீ எப்படி என் மனைவிக்கு போன்பண்ணலாம், நம்பர் எப்படி கிடைத்தது என்று சந்தேகப்பட்டு,  ஏட்டுவை பிடித்து முகத்திலே சரமாரியாக குத்தியுள்ளாராம். அக்கம்பக்கத்தினரும் இதனை பார்க்க அழுகுரலோடு வௌியேசென்ற ஏட்டுவுக்கு கைநிறைய பணத்தை கொடுத்து ஆஸ்பிட்டலுக்கும் ப

“காவலன்” செயலியை உபயோகிப்பது எப்படி..?

பொதுமக்களின், குறிப்பாக பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்ட காவலன் செயலியை ஆண்டிராய்டு மற்றும் ஐபோனில் எளிமையாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஆண்டிராய்டு பிளே ஸ்டோரிலும், ஐபோன் “ஆப் ஸ்டோரிலும்” காவலன் செயலியை பதிவிறக்கம் செய்யலாம்....  மொபைல் எண், பிறந்த தேதி, முகவரியையும் ஏதேனும் 3 முக்கியமான மொபைல் எண்களையும் பதிவு செய்துகொள்ள வேண்டும். ஆபத்தை எதிர்கொள்ள நேரிட்டால், செயலியில் SOS என்று பொறிக்கப்பட்டுள்ள சிகப்பு நிற பொத்தானை தொட்டவுடன், 5 விநாடிகளில் பதிவு செய்யப்பட்ட எண்களுக்கும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் சென்றுவிடும். அடுத்த 5 நிமிடங்களில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விடுவார்கள்.

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது

திருச்சி சிவாவுக்கு நாடாளுமன்றத்தின் உயரிய விருது

2019- ஆம் ஆண்டுக்கான சிறந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா. ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயல்படும் உறுப்பினர்களை, தேர்வுசெய்து லோக்மாத் மீடியா குரூப் விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த விருதுக்கு முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டவர் சி.பி.எம். கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆவார். இரண்டாவது முறையாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கவுரவிக்கப்பட்ட நிலையில், தற்போது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.மக்களவையிலும், மாநிலங்களவையிலும் *தாம் அங்கம் வகிக்கும் காலகட்டத்தில், ஜனநாயகத்தின் வலிமையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரத் பவார் மற்றும் சுபாஷ் காஷ்யப் உள்ளிட்ட 11 பேரை உள்ளடக்கிய தேர்வுக்குழு, இந்த முடிவை எடுத்திருக்கிறது. *நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதினை, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பிக்கிறார்.

உலகளவில் டுவிட்டரில் இரண்டாம் இடத்தில் உள்ளது

தெலங்கானா போலீசுக்கு குவியும் பாராட்டு.. டிரென்டாகும் ஹேஷ்டாக்குகள்..! பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நால்வரையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பலரும் பதிவிடுவதால், அதுகுறித்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவிலும், உலகளவிலும் டிரென்டாகி வருகிறது. தெலங்கானா மாநிலம் சம்சாபாத்தில், கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இடத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில், அந்த கொடூரங்களை அரங்கேற்றிய நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டனர். அனைத்துத் தரப்பினரும் மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், நால்வரையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா காவல்துறையை பாராட்டியும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், டுவிட்டர் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர். தெலங்கானா காவல்துறையை பாராட்டும் டுவிட்டர் பதிவர்கள், சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரையும் வாழ்த்தி வருகின்றனர். இந்த வகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹைதராபாத் காவல்துறை சிறந்த பணியை மேற்கொண்டிருப்பதாகவ

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

வைகை அணையின் கரையோர மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

71அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 60 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாகவும், முல்லைபெரியார் அணையில் இருந்து கடந்த திங்கட்கிழமை மூவாயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டதாலும் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியது. அதன் காரணமாக கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையை விடப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர் இருப்பு ஐந்தாயிரத்து 471 மில்லியன் கனஅடியாக இருந்த நிலையில் அணையின் நீர்வரத்து வினாடிக்கு ஆயிரத்து 961 கனஅடியாக அதிகரித்தது. இதனால் நள்ளிரவில் அணையின் நீர்மட்டம் 68 புள்ளி 60 அடியை எட்டியதால் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்கிடையே அணையில் இருந்து வினாடிக்கு இரண்டாயிரத்து 190 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வைகை ஆற்றின் கரையோரம் செல்லவும், குளிக்கவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த புது குழப்பம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு படித்த பின்பு புதிய அறிவிப்பு வெளியிடபடும். தேர்தல் ஆனையம்

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக படித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் தேர்தல் ஆணையம் அறிவிப்பு

‘பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுண்ட்டர்!’

தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை! தெலங்கானாவில் பெண் மருத்துவர் கொலை வழக்கு: குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச்சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயன்றதால் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீஸ் தகவல்.

ஜெயலலிதா நினைவுநாள்: நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் மரியாதை

  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு கருப்பு சட்டை அணிந்தபடி, வாலாஜாபாத் சாலை வழியாக பேரணியாக சென்ற முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பிறகு, ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இலங்கை பிரதமர் ராஜபக்சவுக்கு 6வயது இஸ்லாமிய சிறுவன் எழுதிய கடிதம்!

இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்சவிற்கு, இலங்கையின் சுற்றுச்சூழலை காப்பதற்கு முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி லண்டனைச் சேர்ந்த 6 வயது சிறுவன் கடிதம் எழுதியுள்ளான். கடிதம் அனுப்பிய சிறுவன் அப்துல்லா அபுபைத்திற்கு நன்றி தெரிவித்திருக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்ச, அக்கடிதத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளதுடன், இன்று காலையில் எனக்கு 6 வயது சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் கிடைத்தது. இக்கடிதம் எனக்கு வெகுவாக உத்வேகம் தந்ததுடன் ஊக்கமளித்தது. இளம் தலைமுறையினர் மீதான பொறுப்புகளை நினைவுபடுத்தும் விதமாகவும் இது இருந்தது. ஒரு நாள் நிச்சயம் அச்சிறுவனை நேரில் சந்திப்பேன் என நம்புகிறேம். உனக்கு எனது வாழ்த்துக்கள் என குறிப்பிட்டிருந்தார். சிறுவனின் கடிதத்தில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது? அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு, நான் அப்துல்லா, லண்டனில் வசிக்கும் 6 வயது சிறுவன். நான் பாதி பிரிட்டிஷ்காரன், மீதி இலங்கைகாரன் - என்னுடைய இதயம் 100% இலங்கையின் மீது காதல் கொண்டுள்ளது. உங்கள் தேர்தல் வெற்றி குறித்து எனது தாயார் கூறியிருந்தார், உங்களுக்கு எனது வாழ்த்துகள். உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

சசிகலா வீட்டை உடனே இடிக்க மாநகராட்சி அதிரடி உத்தரவு..!...

தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள ஜெயலலிதா தோழியான சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன. 10,500 சதுர அடி பரப்புடைய மனையில் வீடும், காலி இடமும் உள்ளன. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், கட்டிடத்தை மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்திய போது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் கட்டிடத்தை இடிக்க வேண்டும் என செப்டம்பர் 17-ம் தேதி அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பு என தெரிவிக்கப்பட்டது. ஆனால், கட்டிடம் இடிக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று, சசிகலா வீட்டின் முகப்புப் பகுதியில், மாநகராட்சி அலுவலர்கள் நோட்டீஸ் ஒட்டினர். அதில், இந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து அபாயகரமாக உள்ளதால் கட்டிடத்தின் உள்ப