Skip to main content

Posts

Showing posts from May, 2018

டாஸ்மாக்குக்கு ரூ.231 கோடி இழப்பு

டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருவாய் இந்த ஆண்டு ரூ.231 கோடி குறைந்துள்ளது. 2016 - 17ம் ஆண்டுகளில்  ரூ.26,995.25 கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் 2017- 18ல் ரூ.26,794.11 கோடியாக உள்ளது என சட்டப்பேரவையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்

எந்தவிதத்திலும் பயங்கரவாதத்தை தலைதூக்க விடமாட்டோம். வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது பொதுமக்கள் என்றும் அரசுக்கு நண்பர்கள்; அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் நடிகர் ரஜினிக்கு கண்டனம்

தூத்துக்குடியில் துப்பாக்கிச்சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துவிட்டு, சென்னை திரும்பிய ரஜினி காந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர்கள் மீது பாய்ந்த ரஜினிகாந்த், ஒருமையில் மிரட்டும் வகையில் பேசினார். அவருடைய நடவடிக்கைக்கு சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி. இதற்காக மிரட்டுவது, ஒருமையில் பேசுவது போன்ற அநாகரிக செயல்களை அனுமதிக்க முடியாது. இப்படிப் பேசியதற்காக நடிகர் ரஜினி காந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னைப் பத்திரிகையாளர் சங்கம் (MUJ) வலியுறுத்துகிறது.

போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி வன்முறைக்கு சமூகவிரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ரஜினிகாந்தின் இல்லத்தை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்,

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளம்

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.குற்றாலத்தில் சீசன் துவங்கி விட்டதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. வெயிலும் சாரல் மழையும் மாறிமாறி வந்ததால் மிகவும் ரம்யமான சூழ்நிலை நிலவியது. ஐந்தருவி பகுதியில் அதிகமாக குளிர் காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்றால் போல் தண்ணீர் பரவலாக விழுந்தது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் வரத்துக்கு குறைவில்லை. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவ,மாணவிகளின் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக காணப்படுகிறது. குற்றாலம் மலைப்பகுதியில் சாரல் மழையின் ஆதிக்கத்தால் அப்பகுதி ஊட்டி, கொடைக்கானல் போல் காட்சி அளித்தது. மழை மேகக்கூட்டங்கள் பொதிகை மலையை த

ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்- சரத்குமார்

ரஜினியை தேசத் துரோக சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்- சரத்குமார் மனிதனுக்கு போராட உரிமை இல்லையா? தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு சரத்குமார் எதிர்ப்பு

சமூக விரோதிகள் என்றதால் ரஜினிக்கு வலுக்கும் எதிர்ப்பு

தூத்துக்குடி மக்களை சமூகவிரோதிகள் என்று கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினி கா ந்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு. காலா, 2.ஓ படங்களை புறக்கணிக்க தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர்கள் முடிவு.

அமைதியான போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கலவரம் செய்து உள்ளனர் - ரஜினிகாந்த்

தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் அமைதியான போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து கலவரம் செய்து உள்ளனர். இதே போல தான் ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் நடைபெற்றது. போலீசாரை தாக்கியவர்களின் படங்களை பேப்பரில் போட்டு இருக்க வேண்டும். 13 பேர் உயிரிழப்பிற்காக தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை தமிழ்நாட்டில் சமூக விரோதிகள் அதிகமாக உள்ளனர். இந்த விஷக்கிருமிகளை இரும்புக் கரம் கொண்டு அகற்ற வேண்டும் என கூறினார்.

குழந்தை கடத்தல்காரர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் -கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவியதை அடுத்து வதந்திகளை நம்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் எச்சரிக்கை வட மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தல் கும்பள் தமிழகத்திற்குள் வந்துள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்பபடுகிறது. பொது மக்கள் யாரும் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார். கிராமத்திற்கு வரும் அறிமுகம் இல்லாத நபர்களை தாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் பின் வரும் என்னில் தொடர்பு கொள்ளவும். உத்தனபள்ளி:9498101127 ராயகோட்டை: 9498101120 கெலமங்களம்:9498101109 தேன்கனிக்கோட்டை: 9498101094

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ரஜினி நேரில் ஆறுதல்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ரஜினி நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார். ரஜினி ரசிகர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்துக்கு வெளியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் மருத்துவமனைக்குள் ரஜினிகாந்துடன் செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஜூன் 5ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் பாட்டியாலா நீதிமன்றத்தில் மனு ஜூன் 5ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தடை ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முன்ஜாமின் கோரிய மனு ஜூன் 5க்கு ஒத்திவைப்பு

வெயில் அதிகம் இருக்கும்- வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தில் அடுத்து வரும் 3 நாட்களில் இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் மேற்கில் இருந்து வீசும் காற்றின் காரணமாக வட மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் சென்னையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று கூறியுள்ளது.

11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு - கலவி அமைச்சர் மாவட்டம் முதலிடம்

2017-18ஆம் கல்வியாண்டில் முதல்முறையாக நடத்தப்பட்ட 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு மொத்தமாக 91.3 சதவீதம் தேர்ச்சி; மாணவிகளில் 94.6 சதவீதம் தேர்ச்சி, மாணவர்களில் 87.4 சதவீதம் பேர் தேர்ச்சி பிளஸ் 1 பொது தேர்வு முடிவுகள் வெளியீடு: மாநில அளவில் 97.3% தேர்ச்சி விகிதம் பெற்று ஈரோடு மாவட்டம் முதலிடம் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகளில் 83.9% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்  2,724 அரசு பள்ளிகளில் 188 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 500 மதிப்பெண்ணுக்கு மேல் வாங்கியவர்கள் - 30,380 பேர் 451 - 500 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 64,817 பேர் 426 - 450 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 48,560 பேர் 401 - 425 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 61,369 பேர் 351 - 400 வரை மதிப்பெண் பெற்றவர்கள்- 1,60,581 பேர்

வசந்தபுரத்தில் இரத்ததான முகாம்

நாமக்கல் மாவட்ட பரமத்திவேலூர் வட்ட பரமத்தியை அடுத்த வசந்தபுரத்தில் கந்தம்பாளையம் அரிமா சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இரத்தவங்கியினர் இணைந்து ஸ்ரீராமமூர்த்தி  உயர்நிலைப்பள்ளியில் இரத்ததான முகாம் நடத்தினர். இதில் 30பேர் இரத்த தானம் செய்தனர். வட்டார மருத்துவ அலுவலர் கௌரி, இரத்தவங்கி மருத்துவ அலுவலர் அன்புமலர் , வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கவியரசு நண்பர்கள் விழா ஒத்துழைப்பு நல்கினர்.

வங்கிகள் வேலை நிறுத்தம்- அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளம் அறிவிப்பு

வரும் 30,31 தேதிகளில் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளம் அறிவிப்பு டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தை அடுத்து வேலை நிறுத்தம் உறுதி வங்களை தனியார் மயமாக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் என பல கோரிக்கைகள் வழியுறுத்தி வேலை நிறுத்தம்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – புதிய அரசாணை ! முற்றுகைப் பேராட்டம் ஒத்திவைப்பு

ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – புதிய அரசாணை ! முற்றுகைப் பேராட்டம் ஒத்திவைப்பு !! கடும் விதிமுறை இல்லாமல் 40 சதவீத ஊனமுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும், 2016 ஆம் ஆண்டு தமிழக அரசின் சமூகநலத்துறை வெளியிட்ட அரசாணை எண்.27ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்றும் கோரி மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மே-29 முதல் சென்னை எழிலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி, இன்று(மே-28) காலை 11-00 மணிக்கு  சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டிட வளாகத்தில் உள்ள மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், கூட்டு இயக்க நிர்வாகிகளுடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அருண்ராய், மாநில சமூகப் பாதுகாப்புத்திட்ட இணை ஆணையர்                  எம். லக்ஷ்மி உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.   ஆனால், அப்பேச்சுவார்த்தையின்போது எந்தவித அரசாணையோ, உத்தரவோ அரசு வெளியிடாததால், போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் என கூட்டு இயக்க நிர்வாக

நீலகிரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளராக சண்முகப்பிரியா பொறுப்பேற்பு.

நீலகிரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு. நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த முருளிரம்பா தூத்துகுடிக்கு மாற்றப்பட்டார். நீலகிரி மாவட்ட காவல் துறை கணகாணிப்பாளராக சண்முகபிரியா அறிவிக்க பட்டார். அவர் இன்று முறைப்படி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராய்  பொறுப்பேற்று கொண்டார். 2003ம் ஆண்டு துணை காவல்துறை கண்காணிப்பாளராய் நாமக்கல்லில் தனது பணியை தொடங்கிய இவர் 2004 முதல் 2006 வரை அரியலூரிலும் 2006 முதல் 2008 வரை கோவையிலும் சிறப்பாக பணியாற்றி உள்ளார். 2008ல் விஜிலென்ஸ் துறைக்கு மாற்றப்பட்டு மிக சிறப்பாக பணியாற்றினார். 2013ல் சென்னை வடக்கிகில் பணியாற்றி தற்போது நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராய் பொறுப்பேற்றுள்ளார்.

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக தகவல்

தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்த துணை வாட்டாட்சியர்கள் உத்தரவிட்டதாக தகவல் துப்பாக்கி சூடு தொடர்பாக தூத்துக்குடியில் இரண்டு வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.  துப்பாக்கி சூடு பற்றி   சிப்காட், வடபாகம் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளில் துணை வாட்டாட்சியார்களின் உத்தரவின் பேரில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.  தனி துணை  வாட்டாட்சியார்  சேகர், சிப்காட் ஆய்வாளர் ஹரிஹரனுக்கு உத்தரவிட்டதன் பேரில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது.திரேஸ்புரத்தில் மண்டல துணை வாட்டாட்சியார் கண்ணன் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. துணை வாட்டாட்சியார் கண்ணன் ஆய்வாளர் பார்த்திபனுக்கு துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக FIR  பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் கேரள ஆளுநர் சந்திப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் கேரள ஆளுநர் சதாசிவம் சந்தித்து வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கொள்ளை.. ரூ.6 கோடி மதிப்பிலான நகைகள் அபேஸ்.

ஆயில் மில் பகுதியிலுள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது. வங்கி இருக்கும் கட்டிடத்தின் கீழ் தளத்தில் கடை ஒன்று இருந்துள்ளது. முதல் தளத்தில் வங்கி இருந்துள்ளது. அந்த கடைக்குள் புகுந்த கொள்ளையர்கள் எளிதாக வங்கியை கொள்ளையடித்துள்ளனர். கடைக்குள் புகுந்து மேலே சுவரை இடித்து முதல் தளத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று நகைகளை கொள்ளையடித்துள்ளனர். இதனால் சுமார் 6 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கியில் இருந்த அடகு வைக்கப்பட்ட நகைகள் எல்லாம் கொள்ளை போயுள்ளன. இந்த விஷயம் இரண்டு நாட்களாக தெரியாமல் இருந்துள்ளது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கி திறக்கப்பட்டபோது நகைகள் மாயமானது தெரிய வந்துள்ளது. நகைகள் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸ் சோதித்து வருகிறது.

சேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு திமுக எதிர்ப்பு

சேலம் விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில் ஒமலூர் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இதில் விவசாயிகள், பொது மக்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்துக்கொண்டனர். அதில் மத்திய மாநில அரசுக்கு எதிராகவும்,விவாக்கப்பணியை கைவிட கோரியும் முழக்கங்கள் எழுப்பினர் . இறுதியில் பாசமிகு அண்ணார் இரா.இராஜேந்திரன் கண்டன உரையாற்றினார்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்: துணை முதல்வர் ஓபிஎஸ்,

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின் துணை முதல்வர் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடியில் தற்போது அமைதி திரும்பி உள்ளது.மேலும் துப்பாக்கிச்சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணம்வழங்கப்பட்டு விட்டது என அவர் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி: யானைக் கூட்டத்தை விரட்டியடிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் யானைக் கூட்டத்தை வனத்திற்குள் விரட்டியடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

எனது அரசியல் வாரிசு யார்?: மாயாவதி பரபரப்பு பேட்டி

லக்னோ: எனக்கு பின் அரசியல்வாரிசாக வரவேண்டும் என யாரும் கனவு காண வேண்டாம் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.

பெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்

''விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டி, 'பந்த்' நடத்த திட்டமிடப்பட்டது.ஆர்.ஆர்.நகரில், நாளை தேர்தல் நடப்பதால், பெங்களூரு தவிர, மாநிலத்தின் மற்ற பகுதிகளில், 28ம் தேதி, பந்த் நடத்தப்படுவது உறுதி,'' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.

கூடலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணியில் 60 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் தனித்தனி குழுக்களாக பிரிந்து வனவிலங்குகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை அரசுக்கு கூறலாம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

சமூக வலைதளங்களில் தீய சக்திகள் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன; பொதுமக்களின் போராட்டம் வடிவம் மாறும் போது அரசு அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்கும். ஜனநாயக நாடான இந்தியாவில் பொதுமக்கள் தங்கள் தேவைகளை அரசுக்கு கூறலாம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்டது -மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை ரூ 1.04 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது, மற்றவர்களுக்கும் தொடர்ந்து வழங்க நடவடிக்கை. தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம்: மீனவ சங்கம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என மீனவ சங்கத்தினர் அறிவித்தனர். ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால் தான் உடலை பெற்றுக்கொள்வோம் என்று பங்குத் தந்தை ததூத்துக்குடியில் பேட்டி அளித்துள்ளார். தூத்துக்குடியில் ஆட்சியருடனான ஆலோசனைக்கு பின் மீனவ சங்கத்தினர் இதனை தெரிவித்தனர். உயிர் தியாகம் செய்ததாக எண்ணிக்கொள்வோம் என்று பங்குத் தந்தை கூறியுள்ளார்.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் மீது வெள்ளையன் தாக்குதல்

பெரம்பூரில் உள்ள உணவகத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் தாக்கபட்டார் .

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனை 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலடைக்க  திருக்கோவிலூர் நீதிமன்றம் ஆணை. உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் வேல்முருகனை விழுப்புரம் போலீசார் கைது செய்திருந்தனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பினர் சிறையில் இருந்து வெளிவந்தனர்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடியதற்காக படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகப் போராடி சிறையிலடைக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பளர் ராஜூ., புமாஇமு ஒருங்கிணைப்பாளர் கணேசன் உள்ளிட்ட 30 பேர் இன்று காலை 8.30 மணிக்கு  வெளிவந்தனர்.

தூத்துக்குடியில் காவல்நிலையம் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

தூத்துக்குடியி மாவட்டம் விளாத்திகுளம் அருகே காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். குளத்தூர் காவல்நிலையம் மீது அதிகாலையில் மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிச் சென்றனர். சிசிடிவி காட்சி பதிவை வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன்  உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.

திருச்செங்கோடு அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 பேர் காயம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்த சித்தாளந்தூர் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து. கடும் மழையில் வேகமாக சென்றதால் விபத்து, விபத்தில் 40 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்.

தீத்துக்குடியில் நடந்தது என்ன???

தூத்துக்குடி கலெக்டர் ஆஃபிசிலிருந்து பிரபல ஆங்கில ஊடக நிரூபர் வெளியிட்டுள்ள அதிர்ச்சி வீடியோ... எதிர்கட்சி தலைவர்கள் தூத்துக்குடி சம்பவம் என்பது திட்டமிட்டு நடத்தப்பட்ட சம்பவம் எனக் கூறி வரும் நிலையில் பிரபல ஆங்கில ஊடக பத்திரிக்கையாளர் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதேவ் என்ற அந்த நிரூபர் பல விஷங்களை நேரடியாக காட்டி பல்வேறு கேள்விகளை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு எழுப்புகின்றார். அதில் குறிப்பாக கலெக்டர் அலுவலக வாயிலில் இருக்கும் 2 சிசிடிவி கேமராவும் சொல்லி வைத்தார் போன்று தரையை நோக்கி திருப்பப்பட்டுள்ளது. கேமரா உடைக்கப்படவில்லை அதை யாரும் தாக்கியது போன்றும் தெரியவில்லை. ஆனால் கலெக்டர் அலுவலக நுழை வாயில் கதவிற்கு மேல் உள்ள இரண்டு கேமராவும் தரையை பார்த்து செங்குத்தாக உள்ளது. அந்த கேமராக்கள் உயரத்தில் இருப்பதால் அதை உடைப்பது என்பது எளிதல்ல எனவும் அவர் கூறுகின்றார். கலெக்டர் அலுவலகத்திற்குள்ளே பொதுமக்கள் புகுந்தார்கள் என்றால் அதன் சிசிடிவி காட்சிகளை காட்டுக் எனக் கேட்கப்படும்