Skip to main content

உலகளவில் டுவிட்டரில் இரண்டாம் இடத்தில் உள்ளது

தெலங்கானா போலீசுக்கு குவியும் பாராட்டு.. டிரென்டாகும் ஹேஷ்டாக்குகள்..!

பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நால்வரையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா போலீசாருக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் பலரும் பதிவிடுவதால், அதுகுறித்த ஹேஷ்டேக்குகள் இந்திய அளவிலும், உலகளவிலும் டிரென்டாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் சம்சாபாத்தில், கால்நடை பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட இடத்திலிருந்து, 100 மீட்டர் தொலைவில், அந்த கொடூரங்களை அரங்கேற்றிய நான்கு பேரும் இன்று அதிகாலை என்கவுன்டர் செய்யப்பட்டனர்.

அனைத்துத் தரப்பினரும் மரண தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், நால்வரையும் என்கவுன்டர் செய்த தெலங்கானா காவல்துறையை பாராட்டியும், அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், டுவிட்டர் ஏராளமானோர் பதிவிட்டு வருகின்றனர்.

தெலங்கானா காவல்துறையை பாராட்டும் டுவிட்டர் பதிவர்கள், சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனாரையும் வாழ்த்தி வருகின்றனர். இந்த வகையில், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஹைதராபாத் காவல்துறை சிறந்த பணியை மேற்கொண்டிருப்பதாகவும், போலீசாருக்கு தமது வணக்கத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் கூறியிருக்கிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெளியிட்டிருக்கும் டுவிட்டர் பதிவில், ஹைதராபாத் போலீசாரை பாராட்டுவதாகவும், காவலர்களை, காவலர்களாக செயல்பட அனுமதித்த, அத்துறையின் தலைமையை வாழ்த்துவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தெலங்கானா போலீசாரை வாழ்த்தி பலரும் இடும் பதிவுகள் மூலம், என்கவுன்டர் குறித்த ஹேஷ்டாக்குகள், இந்திய அளவில், முதல் ஆறு இடங்களில் உள்ளது. உலகளவில், டுவிட்டரில் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சாஸ்த்ரா பல்கலைக் கழக ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.