Skip to main content

Posts

Showing posts from 2018

"எனது பாரதம்" இளைஞர் பேரணி!

சென்னையில், எனது பாரதம் என்ற தலைப்பிலான இளைஞர் பேருந்து பேரணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில் சென்னையில் நாளை வரை இளைஞர் பேருந்து பேரணி நடைபெறுகிறது. தூய்மையை பேணிக்காக்க, யோகா, தியானம் மூலம் அறநெறிகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி இந்த பேரணி  நடைபெறுகிறது.

முன்பதிவில்லா விரைவு ரயில்!

இன்று முதல் தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி வரை முன்பதிவில்லா அந்த்யோத்யா விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த விரைவு ரயிலின் அறிமுக விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் இன்று மாலை நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர், ராஜென், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல - ரஜினி

காவிரி விவகாரத்தில் கருத்து கூறியதற்காக காலாவை ரிலீஸ் செய்ய முடியாது என்பது சரியல்ல. காவிரி ஆணையம் அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பு பற்றி நான் கூறியதில் என்ன தவறு உள்ளது. காவிரி பிரச்னைக்காக கர்நாடகாவில் காலா படத்தை எதிர்ப்பது சரியல்ல;இதை புரிந்து கொள்ள வேண்டும் என ரஜினி தெரிவித்துள்ளார்.

தமிழக மக்கள் மீது பாஜக-வுக்கு அக்கறை உள்ளது - தமிழிசை

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன்,   தமிழக மக்கள் மீது பாஜக-வுக்கு அக்கறை உள்ளதாக கூறினார். தற்போதைய நிலையில் தேசிய ஒருமைப்பாடு என்பது கேள்விக்குறியாக உள்ளதாக கூறினார். தமழக மாணவர்களை இன்னும் தன்னம்பிக்கையோடு தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்றார். மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் நீட் தேர்வுக்கு அதிகம் எதிர்ப்பு உள்ளதாக குறிப்பிட்டார்

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இலவச நாட்டுக்கோழி திட்டம் அமல்படுத்தப்படும்: முதல்வர் பழனிசாமி

தமிழகத்தில் இலவச நாட்டுக்கோழி திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். இலவச ஆடு, மாடுகளை தொடர்ந்து நாட்டுக்கோழி திட்டத்தையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் ரூ. 100 கோடி செலவில் மாதவரம் பால்பண்ணை விரிவாக்கம் செய்யப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்*

சாஸ்த்ரா பல்கலைக் கழக ஆக்கிரமிப்புகள் மீட்கப்படும் : அமைச்சர் சி.வி.சண்முகம்

சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விரைவில் மீட்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். சாஸ்த்ரா பல்கலை. ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு திறந்தவெளி சிறைச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.

ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது

காலா படத்தை வெளியிட கோரி தனுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது. ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது. படக்குழுதான் அரசை அணுகி தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும். காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் படக்குழு முறையிடலாம். அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால்??? படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நீட் விவாதம் - திமுக வெளி நடப்பு

உச்சநீதிமன்றம்  தீர்ப்பினால்  நீட் தேர்வை  அரசு ஏற்றுக்கொண்டது - சி. விஜயபாஸ்கர். நீட் தேர்வு குறித்து திமுக கொண்டுவந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. விவாதத்துக்கு பின் பதில் அளித்து அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பேசினார். நீட் தொடர்பாக அமைச்சர் விளக்கம் ஏற்புடையதாக இல்லை எனக்கூறி சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்ற கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. நீட் தேர்வை கொண்டு வந்ததே மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தான் - பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் : மு.க.ஸ்டாலின்

நீட் தகுதி தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். இனி எத்தனை உயிர்கள் நீட் தேர்வால் பலி ஆகப் போகிறதோ என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு தமிழ் வினாத்தாளில் பல கேள்விகள் தவறாக இருந்ததால் மாணவி தற்கொலை செய்துள்ளார் என்றும் தமிழ் மொழி மீது மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தவறான கேள்விகள் கேட்டுள்ளது என்றும் கூறினார். கடந்த ஆண்டு அனிதாவை இழந்தோமம், இந்த ஆண்டு பிரதீபாவை இழந்துள்ளோம் என்றும் அவர் கூறினார். 

குஜராத்தில் இந்திய விமானப்படை விமானம் விழுந்து நொறுங்கியது! விமானி உயிரிழப்பு

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள முந்திரா பகுதியில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஜாகுவார் ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானி, ஏர் கமான்டர் சஞ்சய் சௌஹான் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் கட்டணக் கொள்ளையை தடுக்க நீட் தேர்வு என மத்திய அரசு கூறியது மோசடி: திருமாவளவன்

தனியார் கட்டணக் கொள்ளையை தடுக்கவே நீட் தேர்வு என மத்திய அரசு கூறியது மோசடி என்று திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். இப்போதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை நடக்கிறது என்றார். மேலும் மாணவி பிரதீபா தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு என்றும் கூறினார். நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார். 

மாவட்ட ஆட்சியர்களுக்கு பசுமை விருதுகள்

2017ம் ஆண்டிற்கான பசுமை விருதுகளை 3 மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்  அண்ணாதுரை, திருவள்ளுர் ஆட்சியர் சுந்தரவல்லி, விழுப்புரம் ஆட்சியர் சுப்பிரமணியன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. சுற்றுசூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கிய தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கும் பசுமை விருதுகள் வழங்கப்பட்டது.

ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய ஜூலை 10 வரை தடை விதித்தது டெல்லி நீதிமன்றம்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர்  ப. சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய ஜூலை 10 வரை தடை விதித்தது டெல்லி நீதிமன்றம்..

திருச்சி: 13.41 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு செல்ல இருந்த புதுக்கோட்டையை சேர்ந்த தனபால் என்ற பயணியிடமிருந்து ரூபாய் 13.41 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்கத்துறை வான்நுண்ணறிவு  பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

குமரியில் தும்பு உற்பத்தி பாதிப்பு

குமரி மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னைகள் உள்ளன. தேங்காய் மட்டையில் இருந்து தும்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 69 தும்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் மூன்று வகையான தும்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழை மற்றும் ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி அடியோடு பாதிப்பு ஆகியுள்ளது. இதனால் ஒரு கதம்பை விவசாய நிலத்தில் இருந்து தும்பு ஆலைக்கு வந்து சேர ரூ.3.25பைசா செலவு ஆகிறது. தற்போது தேங்காய் மட்டை தட்டுப்பாட்டால் குமரி மாவட்டத்தில் தும்பு உற்பத்தி அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது சுமார் 40 டன் தும்பு உற்பத்தி மட்டுமே ஆகிறது என தும்பு ஆலை மாவட்ட தலைவர் குமாரதாஸ் தெரிவித்தார்.

பிளாஸ்டிக் பொருள் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை - முதல்வர் அறிவிப்பு

பிளாஸ்டிக் பொருள் உற்பத்திக்கும் விற்பனைக்கும் தடை 2019 ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. முதல்வர் பழனிசாமி 110 விதியின் கீழ் சட்டப்பேரவையில்  அறிவிப்பு. பால் எண்ணெய் தயிர் ஆகிய அத்தியாவசிய பாக்கெட்களுக்கு விலக்கு...

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தர் பொறுப்பேற்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா  பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராக பேராசிரியர் நா.இராஜேந்திரன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

பிரதீபாவின் உயிரை பறித்த குளறுபடி வினாத்தாள்..

பிரதீபாவின் உயிரை பறித்த குளறுபடி வினாத்தாள்.. முன்கூட்டியே கடிதம் எழுதி வைத்திருந்தது அம்பலம். தமிழ் மொழியில் வினாக்கள் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருந்ததால் அதற்குரிய மதிப்பெண்கள் வழங்குமாறு பிரதீபா கடிதம் எழுதி வைத்துள்ளார்.

திருத்தணி அருகே பூட்டை உடைத்து 20 சவரன் நகை 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பாண்டுரவேடு கிராமத்தில் விவசாயி கிருஷ்ணன் நிலத்தில் நீர் பாய்ச்ச இரவு சென்ற போது பூட்டை உடைத்து 20  சவரன் நகை 80 ஆயிரம் ரொக்கம் கொள்ளை. பொதட்டூர்பேட்டை போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷனிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரகசிய விசாரணை

தூத்துக்குடி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியர் வெங்கடேஷனிடம் தேசிய  மனித உரிமைகள் ஆணையம் ரகசிய விசாரணை.

நீட் தேர்வில் தோல்வியால் விழுப்புரம் மாவட்ட மாணவி மரணம்

நீட் தேர்வில் தோல்வியால் விழுப்புரம் மாவட்ட மாணவி மரணம்!  உயிரை துறந்த சோகம்! 12ம் வகுப்பில் 1125மார்க் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு 155/700 எடுத்து தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 39/700 எடுத்ததால், விரக்தியில் இருந்த பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை.

நீட் தேர்வில் தோல்வியால் விழுப்புரம் மாவட்ட மாணவி மரணம்

நீட் தேர்வில் தோல்வியால் விழுப்புரம் மாவட்ட மாணவி மரணம்!  உயிரை துறந்த சோகம்! 12ம் வகுப்பில் 1125மார்க் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு 155/700 எடுத்து தோல்வி அடைந்த நிலையில், இந்த ஆண்டு 39/700 எடுத்ததால், விரக்தியில் இருந்த பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப்படும் - ஹெச்.ராஜா

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப் படுத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பிற்குள் கொண்டு வர மத்திய அரசிடம் எடுத்து கூறி நடவடிக்கை எடுக்கப் படும் . தமிழக இந்து ஆலயங்களின் ஆக்கிரமிக்கப் பட்ட சொத்துகளை மீட்க நீதிபதி மகாதேவன் உத்திரவுப் படி மீட்டு சந்தை மதிப்பு படி குத்தகை அல்லது வாடகைக்கு விட நடவடக்கை எடுக்கா விட்டால் வரும் ஜீலை முதல் வாரத்தில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் படும் இதற்கு பின்னும் நடவடிக்கை எடுக்கா விட்டால் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 38 ஆயிரத்து 635 கோவில்கள் முன்பாகவும் போராட்டம் நடத்தப் படும் வைகோ சீமான் மே 17 திருமுருகன் காந்தி திருமாவளவன் போன்றவர்கள் தான் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தை வன்முறை பாதைக்கு திருப்பியவர்கள் என குற்றம் சாட்டுகிறேன் திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பேட்டி

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவுசெய்துள்ள 67 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன்விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்சநீதிமன்றம் மற்றும் மாநில உயர்நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின்படியும்அரசாணைகள் மூலம் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதுமேலும், கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைகாலம் நிறைவுசெய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன்விடுதலை செய்யப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது...

நீட் தேர்வில் இந்திய அளவில் முதல் 50இடங்களில் தமிழகத்திற்கு ஒரு இடம் மட்டுமே

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1.14லட்சம் பேரில் 45,336 பேர் மட்டுமே தகுதி ஆகியுள்ளார்கள். தமிழக மாணவி கீர்த்தனா, அகில இந்திய (மதிப்பெண்-676) 12வது இடம் பெற்றார். நீட்  தேர்வில் 720க்கு 691 மதிப்பெண் எடுத்து கல்பனா குமாரி தேசிய அளவில் முதலிடம். இயற்பியலில் 180க்கு 171,வேதியியலில் 180க்கும் 160 உயிரியல்,விலங்கியலில் 360க்கு 360 மதிப்பெண்கள். ஓசி. பிரிவுக்கு 119, ஒபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம். இந்திய அளவில் முதல் 50இடங்களில் தமிழகத்திற்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்து உள்ளது.

காவிரி பிரச்சினையை மீண்டும் பேசி தீர்க்க வேண்டும்- கமல்

காவிரி பிரச்சினையை மீண்டும் பேசி தீர்க்க வேண்டுமென கமல் வலியுறுத்திள்ளார். தீர்ப்பு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட நிலையில் கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கமல் தமிழக மக்களுக்கு பச்சை துரோகம் செய்துவிட்டார், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சீமானுக்கு முன்ஜாமீன்!

திருச்சி விமான நிலைய மோதல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் சீமான் உட்பட 8பேருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது. மே 19ல் மதிமுக -நாம் தமிழர் தொண்டர்கள் இடையே நடந்த மோதல் வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நடவடிக்கை எடுத்தது. சம்பவ இடத்தில் தான் இல்லை என்பதால் சீமான் முன்ஜாமீன் கேட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் மாநாடு இன்று தொடக்கம்!

2 நாட்கள் நடைபெறும் மாநில ஆளுநர்கள் மாநாடு டெல்லி மாகாணத்தில் இன்று தொடங்குகிறது. இந்த ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார். 2 நாட்கள் நடைபெறும் இம்மாநாட்டை  குடியரசுத்தலைவர்  ராம்நாத் கோவிந்த் துவக்கி வைக்கிறார்.

ஓசூர் அருகே உடைந்த மின்கம்ப வயரை மிதித்து ஒருவர் பலி

ஓசூர் அடுத்த உத்தனப்பள்ளி அருகே ஆலேசீபத்தில் மின் கம்பம் வயர்அறுந்து விழுந்ததை கவனிக்காமல் மிதித்ததில் கோழிப்பண்ணையில் வேலை செய்யும் திருச்சியை சேர்ந்த நல்லதம்பி (26) இளைஞர் ஒருவர் பலி.

அறந்தாங்கி அருகே குடிநீர் குழாய் அமைப்பதில் தகராறு

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பெருமருதூரில் குடிநீர் குழாய் அமைப்பதில் அப்பாத்துரை என்பவரை 6 நபர்கள் சேர்ந்து தாக்கியதாகவும் காவல்துறை நடவடிக்கை எடுக்காத கண்டித்து சிறுவரை செல்போன் டவரில் ஏறி முனியன் சுரேஷ் இரண்டு பேர் போராட்டம்.

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும்

நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சுமார் 13 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதியுள்ளனர்.

ஏலகரம் அரசு உயர்நிலை பள்ளியில் மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பழமை வாய்ந்த பள்ளிகளில் ஒன்றான ஏலகரம் அரசு உயர்நிலை பள்ளியில் மின்கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் அறிவியல் ஆய்வகம், நூலகம் உட்பட மூன்று லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் எரிந்து நாசமாயின, காற்றின் வேகத்தால் தீ வேகமாக பரவிய நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் விரைவாக தீயை அணைத்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க இயலாது - அமைச்சர் செங்கோட்டையன்

5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்க்க இயலாது . தனியார் பள்ளிகளில் விதிகளை மீறி சேர்த்து வருகின்றனர். இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறையின் நிலை குறித்து நடந்து வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்: ஜி.கே.வாசன் பேட்டி.

காவிரி மேலாண்மை ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். மேட்டூர் அணையில் இருந்து கல்லணை வரை 100-க்கும் மேற்பட்ட சிறு தடுப்பணைகள் கட்ட வேண்டும். மேலும் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

திமுகவினர் தாங்களாகவே வருகின்றனர் - அமைச்சர் ஜெயக்குமார்

சட்டப்பேரவைக் கூட்டத்தில் இருந்து தாமாக வெளியேறிச் சென்ற திமுகவினர், தற்போது தாங்களாகவே வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு திமுகவினர் வருவதை வரவேற்பதாகவும் கூறினார்.

அவசியத்தேவை என்பதால் சட்டமன்றத்திற்கு செல்கிறோம் - மு.க.ஸ்டாலின்

நெருக்கடியான நேரத்தின் அவசியத்தேவை என்பதால், புதிய நம்பிக்கையுடன் சட்டமன்றத்திற்கு செல்கிறோம் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் வாக்கு எந்திரத்தை பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர் - தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத்

தேர்தலில் தோல்வியடையும் அரசியல்வாதிகள் வாக்கு எந்திரத்தை பலிகடாவாக்க முயற்சிக்கின்றனர் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தேர்தல் முறைகேடுகளைச் சான்றுகளுடன் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியிடப்படாது என்று தெரிவித்துள்ளார்.

கலைஞர் கைகளில் முத்தமிட்ட மூதாட்டி

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 74 வயது பாப்பாத்தி அம்மாள் என்பவர் கருணாநிதியை சந்திக்க விரும்புவதை அறிந்த ஸ்டாலின் அவரை கோபாலபுரம் இல்லத்துக்கு அழைத்து வந்தார். அப்போது கருணாநிதியை பார்த்த உணர்ச்சி மிகுதியால் அவர் தேம்பி அழ ஆரம்பித்தார். பின்னர் கருணாநிதியின் கைகளில் முத்தமிட்டார்.

கருணாநிதிக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த எழுத்தாளர், கவிஞர், சிந்தனையாளர் மற்றும் பேச்சாளர் என்று கருணாநிதியை மோடி பாராட்டியுள்ளார். மேலும் இந்தியாவின் மூத்த அரசியல்வாதியான கருணாநிதி நலமுடன் வாழ மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொட்டியத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல்; குடோனில் பதுக்கி இருந்த குட்கா, பான் மசலா, புகையிலையை போலீசார் கைப்பற்றினர் லாரி கடத்தல் வழக்கு விசாரணைக்கு சென்ற போது புகையிலை பொருட்கள் பிடிப்பட்டன.

தமிழக அரசியலின் மையப்புள்ளி கருணாநிதி - திருமாவளவன்

தமிழக அரசியலின் மையப்புள்ளியாக இருந்து பிற கட்சிகளை இயக்குபவர் கருணாநிதி... அரசியல்களத்தில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் அதிநுட்பம் வாய்ந்த ஆற்றலாளராக முத்திரை பதித்தவர்... திமுக தலைவர் கருணாநிதி நூற்றாண்டுக்கும் மேலாக நலமுடன் வாழ விசிக வாழ்த்துகிறது என திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோபாலபுரத்தில் குவியும் தொண்டர்கள்

கோபாலபுரத்தில் குவியும் தொண்டர்கள்… விழாக்கோலம் பூண்டது திமுக தலைவர் கருணாநிதி இல்லம்… ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறி உற்சாக கொண்டாட்டம்...

இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கு இளையராஜா: ஜனாதிபதி புகழாரம்

ஜூன்-3ம் தேதி இசைஞானி இளையராஜாவின் பிறந்த நாளாகும், ஆனால் அன்றைய நாளில் கருணாநிதி பிறந்த நாள் என்பதால், இன்று தமது 75வது பிறந்தநாளை சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேப்பில் கொண்டாடி உள்ளார். இந்நிலையில், அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் இன்னிசைத் துடிப்பைத் தீர்மானிக்கும் ஒப்பற்ற கலைஞர்'என்று இளையராஜாவுக்கு 3 மொழிகளில் தனது ட்வீட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்கள் பரிந்துரை

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக உறுப்பினர்களாக பொதுப்பணி முதன்மை செயலர் எஸ்.கே.பிரபாகர், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் செந்தில்குமார் ஆகியோர் பரிந்துரை.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனை அலட்சியம்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில், விஜயபாரதி மற்றும் மகேஷ்வரி பிரசவத்திற்காக வந்த  வயிற்றுக்குள், மருத்துவர்கள் பஞ்சு வைத்து தைத்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்... மருத்துவமனை முற்றுகையிட்டதால் பரபரப்பு.... பிரச்சனை சமாளிக்க அரசு மருத்துவ கல்லூரி நிர்வாகம் வைட்டமின் "ப" ஏற்பாடு செய்து பிரச்சனை சுமூகமாக முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது என சூசகமாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு ஜூன் 26-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பெருந்துறை சிப்காட்டில் நிலம்,நீர்,காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை மூடக்கோரி பெருந்துறை மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் முன்பு 2018 ஜூன் 26-ல் மாபெரும் ஆர்ப்பாட்டம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் முடிவு செய்துள்ளது. பெருந்துறை சிப்காட் சுற்றுவட்டார கிராம மக்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சூழல் ஆர்வலர்கள், பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், நேற்று (1-6-2018) மாலை பெருந்துறை செந்தூர் மஹாலில் திரு.வி.எம்.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், தீர்வுக்கு மேற்கொள்ள வேண்டிய தொடர்நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிறைவாக, பின்வரும் தீர்மானங்கள் வருமனதாக நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள்: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் 2700 ஏக்கர் பரப்பில் சிப்காட் (SIPCOT) அமைக்கப்பட்டு கடந்த சுமார்25 ஆண்டுகளாக செய்ல்பட்டு வருகிறது. இங்கு துணி,நூல் பதனிடுதல், சாயமிடுதல், தோல் பதனிடுதல், ரசாயனம், ஸ்டீல்,டயர்,ரப்பர