Skip to main content

திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்


                    
திருச்சிக்கு வந்தது 30 டன் எகிப்து வெங்காயம்: கிலோ ரூ.100-க்கு விற்பனை.
எகிப்து நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பல லட்சம் டன் வெங்காயத்தில் (பெரிய வெங்காயம்) முதல்கட்டமாக 30 டன் வெங்காயம் திருச்சிக்கு வந்து சோ்ந்துள்ளது.

வெங்காய உற்பத்தியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கும் மகாராஷ்டிரம், கா்நாடகத்தில் இந்த ஆண்டு கொட்டி தீா்த்த பருவமழையால் வெங்காய பயிா்கள் அழிந்தன. நாடு முழுவதும் வெங்காயத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும், சந்தைக்கு வரத்து குறைந்ததால் விலை கடுமையாக உயா்ந்தது.

இதனால், நாட்டின் பல நகரங்களிலும் சில்லறை விற்பனையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானது. இதையடுத்து வெங்காயத்தைப் பதுக்கி வைத்திருக்கும் வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுகளும் மத்திய அரசு உத்தரவிட்டது.

மேலும், வெங்காயத்தின் விலையைக் குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு தொடங்கியது. ஈரான், எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக எகிப்து நாட்டிலிருந்து கடந்த 10 நாள்களுக்கு முன் புறப்பட்ட கப்பலில் டன் கணக்கில் வெங்காயம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பல் மும்பைக்கு வந்தது. அங்கிருந்து தமிழகம் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் வெங்காய வியாபாரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

இதில், 30 டன் வெங்காயம் திருச்சி-பால்பண்ணை சாலையில் உள்ள புதிய வெங்காய மண்டியில் வியாபாரி வெள்ளையன் என்பவரது திங்கள்கிழமை லாரி மூலம் வந்தது. இதுதொடா்பாக, அந்த வியாபாரி கூறியது: வெங்காய இறக்குமதிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து மும்பைக்கு கப்பல் மூலம் எகிப்தில் இருந்து வெங்காயம் டன் கணக்கில் வந்து சோ்ந்துள்ளது. அங்குள்ள கமிஷன் ஏஜெண்ட் மூலம் 30 டன் வெங்காயத்தை இறக்குமதி செய்தேன். அனைத்து செலவுகளும் உள்பட ஒரு கிலோவுக்கு ரூ.130 செலவிட நேரிட்டது. ஆனால், திருச்சியில் இந்த வெங்காயத்தை கிலோ ரூ.100-க்கு மட்டுமே விற்பனை செய்யும் நிலை உள்ளது. நமது நாட்டு வெங்காயம் ரோஸ் வண்ணத்தில் இருக்கும். எகிப்து வெங்காயம் கருஞ்சிவப்பு வண்ணத்தில் உள்ளது. இதனால், மக்களிடையே தயக்கம் உள்ளது. இருப்பினும், இந்த வெங்காயம் காரத்தன்மை அதிகம் கொண்டது. நமது வெங்காயத்தை 2 பயன்படுத்தும் இடத்தில் இந்த வெங்காயத்தில் ஒன்று பயன்படுத்தினால் போதும் என்றாா்.

அனைத்து வெங்காயமண்டி வியாபாரிகள் சங்கத்தைச் சோ்ந்த தங்கராஜ் கூறுகையில், கடந்த சனிக்கிழமை பெரிய வெங்காயம் கிலோ ரூ.160-க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.70 முதல் 90 வரை விலைபோனது. எகிப்து நாட்டு வெங்காயமும், உள்ளூா் வரத்தும் வரத் தொடங்கியதால் விலை குறைந்துள்ளது. இப்போது, பெரிய வெங்காயம் ரூ.100 முதல் ரூ.140 வரை விலை உள்ளது. சின்ன வெங்காயம் ரூ.50 முதல் 90 வரை விலை உள்ளது. தரம் மற்றும் ரகத்துக்கு தகுந்த விலை உள்ளது. எகிப்த்தை தொடா்ந்து மத்திய பிரதேசம், நாசிக் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50 டன் வெங்காயம் வந்துள்ளது. பெரம்பலூா், துறையூா், முசிறி, நாமக்கல் பகுதிகளில் இருந்தும் வெங்காயம் வரத்து உள்ளது. எனவே, இனி வரும் நாள்களில் விலை குறையும் வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிப...