வேலூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அருகே உள்ள கிராமங்களில் மணல் கொள்ளை தடையின்றி நடப்பதால் ஓடைகள், பள்ளத்தாக்குகளாக உறுமாறி போய் உள்ளது. தாசில்தார் துணையுடன் நடக்கின்ற மணல் கொள்ளையின் பின்னணிவேலூர் மாவட்டம் நாட்றம் பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான வெலக்கல் நத்தம், செட்டேரி டேம்,சின்ன மோட்டூர், ஆத்தூர்குப்பம், உள்ளிட்ட பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஓடைகளில் வண்டல் மண், வீடுகட்ட பயன்படும் மணல் கொள்ளை ஜோராக நடந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஓடைகள் முழுமையாக தோண்டப்பட்டு பெரும் பள்ளத்தாக்குகளாக காட்சி அளிக்கின்றது.பச்சூர், கொத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வளம் மிக்க செம்மண் கிடைப்பதால், அங்குள்ள மண்ணை திருடி செங்கல் சூளைகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது. இந்த வண்டல் மண் மற்றும் மணல் கொள்ளையை கண்டு கொள்ளாமல் இருக்க நாட்றம்பள்ளி தாசில்தார் பிரபு கணேஷ் என்பவர் லட்ச கணக்கில் லஞ்சம் பெற்று வருவதாகவும் , மணல் கொள்ளையர்களிடம் இருந்து தாசில்தாரின் கார் ஓட்டுனர் குமார் என்பவர் லஞ்ச பணத்தை வசூல் செய்து கொடுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.இந்த நிலையில் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவரிடம் இருந்து அரசியல் பிரமுகர் மூலம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளார் தாசில் தார் பிரபு கணேஷ், அதனை சரிபார்க்கும் போது அதில் 70 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. இதனால் லஞ்சம் கொடுத்தவருடன் ஓட்டுனர் குமார் பேசிய குரல்பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதுமணல் கடத்தலை தடுத்து நிறுத்துவதோடு, பணம் பெற்றுக் கொண்டு கனிமவள கொள்ளைக்கு துணை போகும் தாசில்தார் பிரபு கணேஷ் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால் ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...
Comments
Post a Comment