Skip to main content

இன்ஜினியரிங் கலந்தாய்வு ஆன்லைன் பதிவுக்கு இன்று கடைசி நாள்

இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு இணையதளம் மற்றும் இணைய சேவை மையங்களில் பதிவு செய்ய இன்று கடைசி நாளாகும். தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைகழகம் மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல்,  அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை, முழுமையாக ஆன்லைனில் நடத்துகிறது.

இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் பதிவு செய்தல் மே 3ம் தேதி தொடங்கியது.  ஆன்லைனில் விண்ணப்பிக்க மே 30ம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், பல்வேறு காரணங்களால் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 2ம் தேதி (இன்று) வரை நீட்டிக்கப்பட்டது. இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கு நேற்று முன்தினம் மாலை வரை இணையதளம் மூலம் 1,28,425 பேரும், இணைய சேவை மையங்கள் மூலம் 12,091 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற உள்ளது. அதற்காக மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் அமைந்துள்ள, இணைய சேவை மையத்தில் நேரில் சென்று அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர், கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் ரேண்டம் எண் வெளியிடப்படும்.

மதிப்பெண் அடிப்படையில் ரேங்க் லிஸ்ட் வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து மாணவர்கள் தங்களின் விருப்பகல்லூரி பட்டியலை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதைத்தொடர்ந்து ஜூலை 30ம் தேதிக்குள், 6 கட்டங்களாக இணையதளம் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும். கலந்தாய்வு தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும், இன்ஜினியரிங் கலந்தாய்வுக்கான பிரத்யேக இணையதளத்தில் (tnea.ac.in) வெளியிடப்படும்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.