Skip to main content

குமரியில் தும்பு உற்பத்தி பாதிப்பு

குமரி மாவட்டத்தில் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தென்னைகள் உள்ளன. தேங்காய் மட்டையில் இருந்து தும்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் மொத்தம் 69 தும்பு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் மூன்று வகையான தும்புகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பருவமழை மற்றும் ஓகி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் தேங்காய் உற்பத்தி அடியோடு பாதிப்பு ஆகியுள்ளது. இதனால் ஒரு கதம்பை விவசாய நிலத்தில் இருந்து தும்பு ஆலைக்கு வந்து சேர ரூ.3.25பைசா செலவு ஆகிறது.

தற்போது தேங்காய் மட்டை தட்டுப்பாட்டால் குமரி மாவட்டத்தில் தும்பு உற்பத்தி அடியோடு பாதிப்பு அடைந்துள்ளது. மாவட்டத்தில் தற்போது சுமார் 40 டன் தும்பு உற்பத்தி மட்டுமே ஆகிறது என தும்பு ஆலை மாவட்ட தலைவர் குமாரதாஸ் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன்  உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.