Skip to main content

குழந்தை கடத்தல்காரர்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் -கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குழந்தை கடத்தல் கும்பல் சுற்றி திரிவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பரவியதை அடுத்து வதந்திகளை நம்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் எச்சரிக்கை

வட மாநிலத்தில் இருந்து குழந்தை கடத்தல் கும்பள் தமிழகத்திற்குள் வந்துள்ளதாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரப்பபடுகிறது. பொது மக்கள் யாரும் அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

கிராமத்திற்கு வரும் அறிமுகம் இல்லாத நபர்களை தாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை

சமூக வலைதளத்தில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

கிராமத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர்கள் யாரேனும் தென்பட்டால் பின் வரும் என்னில் தொடர்பு கொள்ளவும்.

உத்தனபள்ளி:9498101127
ராயகோட்டை: 9498101120
கெலமங்களம்:9498101109
தேன்கனிக்கோட்டை: 9498101094

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

காடுவெட்டி குரு காலமானார்

பாமக காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. பாமகவின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் சற்று முன்  உயிரிழந்தார். வன்னியர் சங்க தலைவராக இருந்தவர் குரு. வன்னியர் சமூக நலனுக்காக குரல் கொடுத்து வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸின் வலதுகரமாகவும் இருந்தார் காடுவெட்டி குரு.