Skip to main content

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை

அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று(21/05/2018) இளையதலைமுறை, சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து அளித்தோம். இதற்குண்டான நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர். அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கினார்.

இது சம்பந்தமான மற்ற துறை அமைச்சர்களான மருத்துவ கல்வித்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகிய அனைவரின் செக்கரட்டரியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்து செல்கிறோம் என வாக்குறுதி அளித்தனர்.

5% மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90% தனியார் பள்ளி மாணவர்களே ஆக்கிரமிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500 பள்ளி கட்டணம் கூட கட்ட முடியாத ஏழை அரசு பள்ளி மாணவரால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50000 என கட்டணம் கட்டி படிக்க முடியும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் cmcell மூலம் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.

நன்றி,
இளையதலைமுறை

Comments

Popular posts from this blog

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.