பரமத்தி வேலூர் தாலுக்கா கபிலர்மலை அருகே உள்ளது தெற்கு செல்லப்பம்பாளையம் அருந்ததியர் தெரு. இங்கு சுமார் நூறுக்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தினமும் குடித்து விட்டு வந்து குடிபோதையில் எல்லோர் வீட்டிலும் நுழையும் வெட்டு மணிகண்டன் என்பவரால் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்துள்ளனர் ஊர் பெண்மணிகள். இவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இதைப் பலரும் தட்டிக்கேட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த பிரச்சனைக்கு காரணம் நீதான் என உள்ளூர்க்காரர் ஒருவரை அடித்து உதைத்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதைப்பற்றி பல முறை காவல்துறையில் மனு அளித்தும் எவ்வித பலனும் இல்லாததால் பொதுமக்கள் திரண்டு காவல்நிலையம் வந்து புகார் அளித்துள்ளனர். தவறான நடத்தை மற்றும் குடிபோதையில் தகராறில் ஈடுபடும் சம்பந்தபட்ட நபர் மீது
மாவட்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தால் பிரச்சனை சுமூகமாக முடியம்...
பாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால் ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...
Comments
Post a Comment