Skip to main content

பரமத்திவேலூர் அருகே வெடிகுண்டு வீச்சு- பரபரப்பு தகவல்கள்


பரமத்தி வேலூர் அடுத்த சித்தம்பூண்டியில் கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடியவர் வீட்டருகே நேற்று இரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வைத் தொடர்ந்து இரண்டு பேரைக் கைது  போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கனிமக்கொள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் வீட்டின் மீது வெடி குண்டு வீச்சால் அப்பகுதியல் பரபரப்பு நிலவி வருகிறது.

 
பரமத்திவேலூர் வட்ட சித்தம்பூண்டி கிராமத்தில் மூன்று கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. தற்போது அதன் அருகிலேயே இரண்டு குவாரிகள் புதிதாக செயல்பட அனுமதியும் பெற்றுள்ளதாக தெரிகிறது. பல கட்டமாக மனுக்கள் மூலமே போராட்டம் நடத்தி வந்த மக்கள் கடந்த மாதம் முதல் லாரிகள் சிறைபிடிப்பு, குவாரி முற்றுகை, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து குவாரியில் கல் எடுக்கத் தடை விதிப்பதாக வாய்வழி உத்திரவாதம் கொடுத்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் ஒன்பது மணி அளவில் ரஞ்சித்குமார் என்பவரின் வீட்டை ஒட்டி உள்ள நல்லான்(55) என்பவரது வீட்டில் மீது வெடிகுண்டு வீசப்பட்டது.    கனிமக் கொள்ளை போராட்டக்குழுவில் ராஜேந்திரன் மகன் ரஞ்சித் குமாரும் ஒருவர். தகவலறிந்த நல்லூர் காவல்துறையினர் வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டதில் மாலை ஆறுமணிக்கு ரஞ்சித்குமாருடைய தாயாரும் தங்கையும் வீட்டை ஒட்டி உள்ள சாலையில் நின்று கொண்டிருக்கையில் மெதுவாக வந்த ஆம்னிகாரில் வந்தவர்கள் தகாத வார்த்தைகள் பேசி  கிண்டலடித்துள்ளனர். அதைத் தொடரந்து உள்ளூர் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி தட்டிக்கேட்டு மிரட்டி அனுப்பி உள்ளனர். அந்த காரை ஓட்டி வந்தவர் பக்கத்து ஊரைச்சேர்ந்தவர். இவரையும் அந்த கார் உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். பயன்படுத்திய வெடிகுண்டு பாறைகளை உடைக்க மற்றும் மீன் பிடிக்கப் பயன்படும் டெட்டனேட்டர் வகைஅயை சேர்ந்தவை என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் இந்த சாதாரண பிரச்சனைக்காகவா வெடிகுண்டு வீசப்பட்டது என பலவித கேள்விகள் எழுந்துள்ளது. சம்பந்தபட்ட நபர்கள் தலைமறைவாக உள்ளதால் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பிடிபடும் பட்சத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...