Skip to main content

தட்டான்குட்டை ஏரி ஆக்கிரமிப்பை தடுக்க கோரிக்கை

இராசிபுரம் தட்டான் குட்டை ஏரியில்  ஆக்கிரமிப்பினை தடுக்க கோரியும்
ஆக்கிமிப்புக்கு பயன்படுத்தி வரும் 3- பொக்லைன் 5-லாரிகள், 2 டிராக்டர்களை பறிமுதல் செய்ய கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இராசிபுரம் வட்டம்,  இராசிபுரம் ஒன்றியம்,  சந்திரசேகரபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட  தட்டான்குட்டை ஏரி உள்ளது. ஷை ஏரியை ஒட்டி இராசிபுரம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை கொட்டும் (உரக்கிடங்கு)   உள்ளது. 

இராசிபுரம் நகராட்சி தட்டான்குட்டை ஏரியை சுமார்  10 ஏக்கர் அளவில்  கடந்த இரண்டு நாட்களாக  ஆக்கிரமிப்பு செய்து கொன்டுள்ளது.  3 பொக்லைன்கள்,  5 டிப்பர் லாரிகள்,   2 டிராக்டர்களை பயன்படுத்தி  21.05.2018 இரவு முதல் இராசிபுரம் நகராட்சி தன்னுடைய குப்பை கிடங்கில் உள்ள பழைய குப்பைகள்,  கட்டிட கழிவுகள் மக்காத குப்பைகள் ஆகியவற்றை ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் கொட்டி ஏரியை குப்பை மேடாக்கி வருகின்றார்கள். 

ஏரியின் நீரில்  தற்சமயம் நகராட்சி கொட்டி வரும் குப்பைகளால்   நீர் மாசடைந்து ஏரியில் உள்ள மீன்கள் பாதிகப்பட்டுள்ளது.  ஏரியின் நீராதாரத்தை நம்பி சுமார் 100-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளும் ஆள்துளைக் கிணறுகளும் உள்ளது மேலும் சந்திரசேகரபுரம்  ஊராட்சி குடிநீர் திட்ட கிணறுகளும் இந்த ஏரியில் உள்ளது ஷை நீர் ஆதாரங்கள் நகராட்சி குப்பையை ஏரியில் கொட்டுவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

எனவே தட்டான்குட்டை ஏரியில் குப்பைக் கொட்டி சுமார் 10 ஏக்கர் அளவில் ஆக்கிரமிப்பு செய்து வரும் இராசிபுரம் நகராட்சி ஊழியர்கள் மீது கடுமையான  சட்ட நடவடிக்கை எடுத்தும் ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்திக் கொண்டுள்ள வாகனங்களை பறிமுதல் செய்தும் ஏரியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது