சேலம் விமான நிலைய விரிவாக்கம் என்ற பெயரில் ஏழை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில் நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து
சேலம் மத்திய மாவட்ட கழக செயலாளர் இரா.இராஜேந்திரன்
தலைமையில் ஒமலூர் பேரறிஞர் அண்ணா சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது இதில் விவசாயிகள், பொது மக்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்துக்கொண்டனர். அதில்
மத்திய மாநில அரசுக்கு எதிராகவும்,விவாக்கப்பணியை கைவிட கோரியும் முழக்கங்கள் எழுப்பினர் . இறுதியில் பாசமிகு அண்ணார் இரா.இராஜேந்திரன் கண்டன உரையாற்றினார்.
தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்; மகன் மட்டுமல்ல; மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...
Comments
Post a Comment