Skip to main content

பேரணியாக வந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தம்.. போலீஸ் தடியடி- மண்டை உடைப்பு!

தூத்துக்குடியில் பேரணி சென்ற பொதுமக்கள் மீது போலீஸ் தடியடி ஸ்டெர்லைட் போராட்ட குழுவினர் தடையை மீறி போராட்டம், போலீசார் தடியடி நடத்தியதால் மோதல் வெடித்தது.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு செல்ல முயன்ற பொதுமக்கள் பாதியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் தடையை மீற முயன்றதால் போலீஸார் தடியடி நடத்தினர். இதனால் பொதுமக்களில் பலருக்கு மண்டை உடைந்தது. தூத்துக்குடி நகரம் தற்போது போர்க்களமாகி உள்ளது.

தூத்துக்குடி அருகே உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது.

இதையடுத்து இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.

ஆனால் அவர்கள் ஆட்சியரகத்துக்கு ஒரு கி.மீ. முன்னதாக மடத்துக்குளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டனர். மக்கள் மதுரை- தூத்துகுடி புறவழி சாலையை பொதுமக்கள் நெருங்க முடியாத வகையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். இதில் பொதுமக்கள் பலருக்கு மண்டை உடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீ வேனை கீழே தள்ளி கற்களால் தாக்குதல் நடத்தினர். தற்போது தூத்துக்குடி நகரமே போர்க்களமாக காட்சி தருகிறது.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.