Skip to main content

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – புதிய அரசாணை ! முற்றுகைப் பேராட்டம் ஒத்திவைப்பு

ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை – புதிய அரசாணை ! முற்றுகைப் பேராட்டம் ஒத்திவைப்பு !!

கடும் விதிமுறை இல்லாமல் 40 சதவீத ஊனமுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டுமென்றும், 2016 ஆம் ஆண்டு தமிழக அரசின் சமூகநலத்துறை வெளியிட்ட அரசாணை எண்.27ஐ முழுமையாக அமல்படுத்த வேண்டுமென்றும் கோரி மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் மே-29 முதல் சென்னை எழிலகத்தில் தொடர் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, இன்று(மே-28) காலை 11-00 மணிக்கு  சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கட்டிட வளாகத்தில் உள்ள மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில், கூட்டு இயக்க நிர்வாகிகளுடன் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தலைமையில், மாற்றுத்திறனாளிகள் நல மாநில ஆணையர் அருண்ராய், மாநில சமூகப் பாதுகாப்புத்திட்ட இணை ஆணையர்                  எம். லக்ஷ்மி உள்ளிட்ட  உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.   ஆனால், அப்பேச்சுவார்த்தையின்போது எந்தவித அரசாணையோ, உத்தரவோ அரசு வெளியிடாததால், போராட்டம் திட்டமிட்டபடி தொடரும் என கூட்டு இயக்க நிர்வாகிகள் அறிவித்ததோடு, அறிக்கையும் வெளியிட்டனர்.

இந்நிலையில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அரசு செயலாளர்                டாக்டர்.கே. மணிவாசன், 28.05.2018 மாலையில் புதிய  அரசாணை(41)ஐ வெளியிட்டார்.  அந்த அரசாணையில், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் நிரந்தர பணி செய்து ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டும் மாற்றுத்திறனாளிகளுக்கும், அதேபோல்  தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சுயதொழில் செய்து, 3 லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும்  மாற்றுத்திறனாளிகளைத் தவிர மற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும்    சமூகப் பாதுகாப்புத்திட்டத்தின்கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூ.1000/- வழங்கப்படும் என்று அந்த உத்தரவில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உதவித்தொகை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு ஏடிஎம் கார்டு, புதிய படிவம் உள்ளிட்ட அரசு ஏற்கனவே அளித்திருந்த வாக்குறுதிகளை விரையில் தமிழக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில், மே-29 முதல் மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் நடக்கவிருந்த தொடர் முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது என அறிவிக்கப்படுகிறது என அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.