குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.குற்றாலத்தில் சீசன் துவங்கி விட்டதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து உள்ளது. குற்றாலத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல்மழை பெய்தது. வெயிலும் சாரல் மழையும் மாறிமாறி வந்ததால் மிகவும் ரம்யமான சூழ்நிலை நிலவியது. ஐந்தருவி பகுதியில் அதிகமாக குளிர் காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறைந்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஏற்றால் போல் தண்ணீர் பரவலாக விழுந்தது. இதனால் உற்சாகமடைந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.
பழையகுற்றால அருவி, புலியருவி, சிற்றருவியிலும் தண்ணீர் வரத்துக்கு குறைவில்லை. தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவ,மாணவிகளின் கூட்டம் குற்றாலத்தில் அதிகமாக காணப்படுகிறது. குற்றாலம் மலைப்பகுதியில் சாரல் மழையின் ஆதிக்கத்தால் அப்பகுதி ஊட்டி, கொடைக்கானல் போல் காட்சி அளித்தது. மழை மேகக்கூட்டங்கள் பொதிகை மலையை தழுவிச் செல்லும் காட்சியை திரளான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
பாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால் ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...
Comments
Post a Comment