Skip to main content

அனுமதியின்றி மருத்துவ விடுப்பா? போலீசாருக்கு சம்பளம் கட்

'அனுமதியின்றி, மருத்துவ விடுப்பில் செல்லும் போலீசாருக்கு, சம்பளம் நிறுத்தப்படும்' என்றஅறிவிப்பு, போலீசாரை அதிர்ச்சியடைய வைத்து உள்ளது.


போலீசாருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால், உடனடியாக, அரசு மருத்துவமனைகளில், வெளிப்புற நோயாளி களாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவர். உரிய பரிசோதனைக்கு பின், சிகிச்சை அளித்த டாக்டரின் அறிவுரைப்படி, மருத்துவ விடுப்பு அளிக்கப்படும். தற்போது, இந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, 'டாக்டரின் அறிவுரைப்படி மட்டும், மருத்துவ விடுப்பு அளிக்க முடியாது;


 ஆர்.எம்.ஓ., என்ற, நிலைய மருத்துவ அதிகாரி கையெழுத்து பெற்று வந்தால் தான், மருத்துவ விடுப்பு வழங்கப்படும்' என, போலீஸ் உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும், 'மருத்துவ விடுப்பில் செல்லும் போது, உயர் அதிகாரிகள் அனுமதியுடன் தான் செல்ல வேண்டும். விடுப்பு முடிந்து பணியில் சேரும்போது, கண்காணிப்பாளரின் அனுமதியை பெற வேண்டும்.



'அனுமதியின்றி, மருத்துவ விடுப்பில் செல்லும் போலீசாரின், மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது.



இது குறித்து, போலீசார் கூறியதாவது: ஆர்.எம்.ஓ., எந்நேரமும் மருத்துவமனையிலேயே இருப்பார் என, கூற முடியாது. அவரிடம் கையெழுத்து பெற தாமதமானால் கூட, உயர் அதிகாரிகள், மருத்துவ விடுப்பு அளிக்க காலதாமதம் ஏற்படும். 


மேலும், அனுமதியின்றி மருத்துவ விடுப்பு எடுத்தால், சம்பளம் நிறுத்தப்படும் என்பதும் சரியானது அல்ல. மருத்துவ விடுப்பு எடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...