பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதித் தமிழர் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் சுப.இளங்கோவனை விடுதலை செய்யக் கோரியும், சமூக விரோதிகளையும் குற்றவாளிகளையும் நடத்துவது போல நடத்திய காவல்துறையினரைக் கண்டித்தும் தரக்குறைவாக பேசிய திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் பாரதிமோகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆதி தமிழர் கட்சியின் தலைவர் ஜக்கையன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகையில் ஈடுபட்டனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சியினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
பாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால் ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...




Comments
Post a Comment