Skip to main content

கிருஷ்ணகிரி: யானைக் கூட்டத்தை விரட்டியடிக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் சுற்றிவரும் யானைக் கூட்டத்தை வனத்திற்குள் விரட்டியடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Comments

Popular posts from this blog

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூரில் ரூ.75 கோடி செலவில் புதிய பால் பண்ணை அமைக்கப்படும். மேலும் தஞ்சாவூரில் ரூ.75 கோடி செலவில் பால்பண்ணை மேம்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

விபச்சாரத்திற்கு துணை போகும் காவலர்கள்

விபச்சார விடுதிக்கு உதவி செய்து பாதுகாத்து வரும் ஈரோடு மாவட்ட தலைமை காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் :  நடவடிக்கை எடுக்குமா ஈரோடு காவல்துறை ? சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் வீரப்பன் சத்திரம் தலைமை காவலர் வடிவேல், கருங்கல்பாளையம் தலைமை காவலர் ஆனந்த குமார் , வீரப்பன் சத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன் , சூரம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் வரதராஜ் அகியோர் விபச்சார விடுதி நடத்தி வரும் பூங்கொடி என்கிற பூங்கோதையுடன் இவர்கள் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோ பதிவு செய்யபட்ட போது பூங்கொடி என்பர் ஈரோடு மாவட்ட வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்தில் விபச்சார வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார் அப்போது காவல்துறை பூங்கொடி மீது எடுக்கும் கைது நடவடிக்கை குறித்து இந்த காவலர்கள் பூங்கொடியை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க அனைத்து உதவிகளையும் செய்து வந்தது தற்போது இந்த ஆடியோவில் அம்பலமாகியுள்ளது. பூங்கொடி தனது நண்பர் ஒருவரிடம் பேசும்போது ஈரோடு வீரப்பன் சத்திரம் தலைமை காவலர் வடிவேல்