Skip to main content

விபச்சாரத்திற்கு துணை போகும் காவலர்கள்



விபச்சார விடுதிக்கு உதவி செய்து பாதுகாத்து வரும் ஈரோடு மாவட்ட தலைமை காவலர்கள் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் :  நடவடிக்கை எடுக்குமா ஈரோடு காவல்துறை ?




சமூக வலைதளங்களில் கடந்த இரு தினங்களாக ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் வீரப்பன் சத்திரம் தலைமை காவலர் வடிவேல், கருங்கல்பாளையம் தலைமை காவலர் ஆனந்த குமார் , வீரப்பன் சத்திரம் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கோவிந்தன் , சூரம்பட்டி சிறப்பு உதவி ஆய்வாளர் வரதராஜ் அகியோர் விபச்சார விடுதி நடத்தி வரும் பூங்கொடி என்கிற பூங்கோதையுடன் இவர்கள் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆடியோ பதிவு செய்யபட்ட போது பூங்கொடி என்பர் ஈரோடு மாவட்ட வீரப்பன் சத்திரம் காவல் நிலையத்தில் விபச்சார வழக்கு ஒன்றில் தேடப்படும் குற்றவாளியாக இருந்தார் அப்போது காவல்துறை பூங்கொடி மீது எடுக்கும் கைது நடவடிக்கை குறித்து இந்த காவலர்கள் பூங்கொடியை இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வைக்க அனைத்து உதவிகளையும் செய்து வந்தது தற்போது இந்த ஆடியோவில் அம்பலமாகியுள்ளது.

பூங்கொடி தனது நண்பர் ஒருவரிடம் பேசும்போது ஈரோடு வீரப்பன் சத்திரம் தலைமை காவலர் வடிவேல் தன்னுடைய விபச்சார விடுதிக்கு வரும் பெண்களை அனுபவித்து வந்தாகவும் இவரை ஒசி டிக்கெட் என்று மட்டமாக பேசிய வார்த்தைகளும் ஆடியோவில் பதிவாகியுள்ளது.விபச்சார விடுதி ஒழிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுய காவலர்களே இவ்வாறு செய்து வந்த இந்த சம்பவம் காவலர்கள் மத்தியில் வேதனையை உருவாக்கியுள்ளது.மற்றொரு ஆடியோவில் சிறப்பு உதவி ஆய்வாளர் வரதராஜ் விபச்சார வழக்கில் பூங்கொடி தலைமறைவாக இருந்த சமயத்தில் இவர் வழக்கில் இருந்து எப்படி சுலபமாக தப்பிக்கலாம் என்றும் பத்திரிகையாளர் மற்றும் பொதுமக்களிடம் சிக்காமல் எப்படி வந்து செல்வது என்பது குறித்தும் ஆலோசனை வழங்கி இவருடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.

காவல்துறை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள நபர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி செய்துவரும் இதுபோன்ற காவலர்களை உடனடியாக நடவடிக்கை எடுத்து அதே வழக்கில் இவர்களையும் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்.

வீரப்பன் சத்திரம் காவல்துறை ஆய்வாளர் அவர்களின் தீவிர முயற்சியால் கடந்த மாதம் வில்லரசம்பட்டி பகுதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி அழகிகளைப் பிடித்து வழக்கு பதிவு செய்தார்.ஆனால் அங்கு இருந்த பூங்கொடி தலைமறைவானார் மேலே குறிப்பிட்டுள்ள காவல்துறையினர் தான் அழகி பூங்கொடி தலைமறைவானதற்கு உதவியவர்கள் என்பது பெரும் வருத்தத்திற்கு உரியது. மிகவும் சிரமப்பட்டு தீவிர முயற்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டாலும் இவர்கள் போன்ற சில காவல்துறை அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவதாலேயே சில சிறந்த காவலர்களின் ஒட்டுமொத்த பெயரும் கெட்டு விடுகிறது. மற்றும் பலகட்சி பிரமுகர்களும் இக்காவலர்களின் உதவியுடன் பூங்கோதை மற்றும் அழகிகளுடன் தொடர்பில் உள்ளனர்.அதுவும் அவ்வழகி தலை மறைவானதற்கு முக்கியக்காரணம்.

பொதுமக்களுக்கு காவலாக இருக்க வேண்டிய இவர்கள் குற்றவாளிகள் தப்புவதற்கும் கிடைக்க இருக்கும் நீதியில் இருந்து காப்பதற்கும் காவலாளிகளாக பணிபுரிந்து வெட்கம் இல்லாமல் மக்கள் தரும் வரிப்பணத்தை சம்பளமாக பெற்று உயிர்வாழ்கிறார்கள் வெட்கம் கெட்டவர்கள்.நாட்டை காக்க வேண்டிய நாடாள வேண்டிய அரசியல்வாதிகளோ இவர்கள் உதவியுடன் நாட்டில் குற்றம் பெருக தாங்களும் கெட்டு நாட்டையும் கெடுத்து தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.இப்படி இருப்பதால் தான் நிர்மலாதேவி போன்ற விரிவுரையாளர்களையும் ஆளுநர்கள் தங்கள் கைப்பாவைகளாக மாற்றி கெட்டழிந்த விபச்சாரிகள் கூட்டத்துடன் வாழவிருக்கும் மாணவிகளையும் கெடுத்து இணைக்கப் பார்க்கிறார்கள் இவற்றுக்கெல்லாம் நியாயம்  கற்பிக்க  வேண்டும் என்றால்  இதோ ஈரோட்டில் மட்டும் அல்ல நாடெங்கும் உள்ள வல்லூறுகளை அடையாளம் கண்டு ஒழித்தே தீரவேண்டும் இன்னும் முயற்சிப்போம். அடுத்தடுத்த குற்றவாளிகளை அடையாளம் காட்ட ஆடியோ ரிலீஸ் தொடர வேண்டும்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

                  2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு அயோத்தி மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடிசுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. அயோத்தியில் உள்ள 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி கூறிய தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி மற்றும் ராமஜென்ம பூமி அமைந்திருந்த இடம் என கூறப்படும் 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வந்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட்டு, அந்த நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லல்லா ஆகிய 3 தரப்பினரும் சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேற்கண்ட 3 தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். மேலும் சிலரும் மேல்முறையீட்டு மனுக் கள் தாக்கல் செய்தனர். அந்த மேல்முறையீட்டு மனுக்களை அப்போதைய தலைமை நீதிப...