Skip to main content

அடுத்த ஆப்பு ஏர்டெல்லுக்கு

ஜியோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பால் அதன் போட்டி நிறுவனமான ஏர்டெல், 12,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்க நேர்ந்துள்ளது.

தொலைத்தொடர்ப்புத் துறையில் கோலோய்ச்சி வந்த ஏர்டெல், ஐடியா நிறுவனங்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் Postpaid திட்டத்தினை நேற்று அறிவித்தது.

199 ரூபாய் மாதாந்திர திட்டத்தில் சர்வதேச அழைப்புகள் நிமிடத்திற்கு 50 பைசா என்ற கட்டணத்தில் மேற்கொள்ளலாம் என்ற ஜியோவின் அறிவிப்பு வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜியோவின் அறிவிப்பு இன்று பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சந்தை தொடங்கியதும் ஏர்டெல் மற்றும் ஐடியாவின் பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. நேற்று மும்பை பங்குச்சந்தை முடிந்த நேரத்தில் 412.25 ஆக இருந்த ஏர்டெல்லின் பங்கு மதிப்பு இன்று 381.2 ஆக சரிந்தது.

நேற்று பங்குச்சந்தையில் 1,64,793 கோடி ரூபாயாக இருந்த ஏர்டெல்லின் மூலதனமதிப்பு, இன்று 1,52,421 கோடிகளாக சரிந்துள்ளது. இதன் மூலம் 12,372 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் இழந்துள்ளது. 

ஏர்டெல்லின் 199 ரூபாய் மாதாந்திர போஸ்ட்பெய்ட் திட்டம் வரும் மே 15ஆம் தேதியன்று அமலுக்கு வருகிறது. இதில் சேரும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு காப்புத் தொகையும் செலுத்தத் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் எல்லையற்ற வாய்ஸ் கால்கள், மெசேஜ்கள், 4ஜி வேகத்தில் 25 ஜிபி டேட்டா ஆகியவை கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.