பரமத்தி வேலூர் அடுத்த சித்தம்பூண்டியில் கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடியவர் வீட்டருகே நேற்று இரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டு மற்றும் தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வைத் தொடர்ந்து இரண்டு பேரைக் கைது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவத்தின்போது வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதசம் தவிர்க்கப்பட்டுள்ளது. கனிமக்கொள்ளையர்களுக்கு எதிராக போராடியவர் வீட்டின் அருகே வெடி குண்டு வீச்சு நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு நிலவுகிறது.
பாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால் ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

Comments
Post a Comment