Skip to main content

மணல் கடத்தலுக்கு உதவும் அதிகாரிகள் மீது குண்டாஸ்: உயர்நீதிமன்றம் உத்தரவு

மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மணல் கடத்தலில் கைதான பாபு என்பவரை விடுவிக்க வேண்டும் என வேடியம்மாள் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதனை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் ராமதிலகம் தலைமையிலான அமர்வு, மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் உடந்தையாக இல்லாமல் மணல் கடத்தல் என்பது சாத்தியமில்லை. அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் கடத்தலில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அனைத்து போலீஸ் ஸ்டேசன்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி, அது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுவரை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினர்.தமிழக லஞ்ச ஒழிப்பு துறை சார்பில், கடந்த 8 ஆண்டில், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.