ரூ.4 லட்சம் கொடுத்தால் வீடு கட்டலாம் - நகைக்கடை அதிபரை மிரட்டிய வி.சி.க பிரமுகர்
சென்னை பாரிமுனையில் நகைக்கடை அதிபரை மிரட்டி ரூ. 4 லட்சத்தைப் பறிக்க முயன்ற விடுதலைச் சிறுத்தை கட்சிப் பிரமுகரை போலீஸார் கைது செய்தனர்.சென்னை, மண்ணடி, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாத். பாரிமுனையில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
இவர், கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் தனது பழைய கட்டடத்தை இடித்து புதிதாக கட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 55 வார்டு வட்ட செயலாளராக இருக்கிறார்.
இந்த நிலையில் ரங்கநாத்திடம், வீடு கட்டவேண்டுமென்றால் ரூ. 4 லட்சம் மாமூலாக எனக்குத் தர வேண்டும் என்று மணிகண்டன் கேட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து ரங்கநாத், பூக்கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். துணை கமிஷனர் செல்வகுமார் உத்தரவின்பேரில் பூக்கடை போலீஸார் விசாரணை நடத்தி, மணிகண்டனை கைதுசெய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர், சிறையில் அடைக்கப்பட்டார்.
நகைக்கடை உரிமையாயரிடம் 4 லட்சம் ரூபாய் மாமூலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments
Post a Comment