Skip to main content

குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும் -கரூர் திருக்குறள் பேரவை

வள்ளுவத்தை வாழ்வியலாக்கி, அன்னைத்  தமிழையும், வள்ளுவத்தையும்    முன்னிலைப்படுத்தி எல்லாவற்றிலும் தமிழை முன்னிலைப்படுத்த வேண்டும் அனைத்து தமிழ் இலக்கிய அமைப்புகள் கோரிக்கை – குழந்தைகளுக்கும், கடைகளுக்கும் நல்ல தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்றும் கரூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன்  கோரிக்கை விடுத்துள்ளார்.

கரூரில், தமிழ் செம்மல் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா கரூர் மாவட்ட தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. கரூர் நகரத்தார் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு வா.செ.கு.கல்வி ஆய்வு அறக்கட்டளைத் தலைவர் பி.டி.கோச் தங்கராஜ் தலைமை வகித்தார். முன்னதாக,,
முன்னிலை உரை கண் மருத்துவர் ரமேஷ்., ஆரா.பழ.ஈசுவர மூர்த்தி.,  அமுதா சுப்பிரமணியம் ஆகியோர் ஆற்றினர்., மேலும் தொடர்ந்து
வாழ்த்துரையில்.,
அருணா பொன்னுசாமி,நாவை சிவம், நாச்சிமுத்து, காமராசு, முனைவர் கோவிந்தராசு, சோபிகா பழநியப்பன், அகல்யா மெய்யப்பன், ப.குமாரசாமி, சே.அன்பு, கா.நா.சதாசிவம், உதயச்சந்திரன், மல்லிகாசுப்பராயன், வழக்கறிஞர் கார்த்திகேயன், த .வாசுதேவன், கார்வழி பத்துமலை,
குளித்தலை ராதா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்,.

மேலும். இந்த கூட்டத்தில், தற்போது தமிழக அரசு வழங்கிய தமிழ்ச்செம்மல் விருது பெற்ற, கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன், பள்ளப்பட்டி பாவலர் எழில்வாணன், பொய்யாமணி வரதசிகாமணி ஆகிய மூன்று பேருக்கும் கரூர் மாவட்ட அனைத்து தமிழ் இலக்கிய அமைப்புகள் சார்பில், பாராட்டுகள் தெரிவித்ததோடு அவர்களை பாராட்டிய தொடு., பணமுடிப்பும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டது
தமிழுறவுப் பெருமன்றம் பழக்கூடை  மற்றும்  பாராட்டியது.தமிழ்ச் சங்கம் புத்தாடை வழங்கிப் போற்றியது மேலும் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் தென்னிலை கோவிந்தன், அனைவரையும் வரவேற்றார். மேலும் முனைவர் கடவூர் மணிமாறன், கவிஞர் கருவூர் கன்னல், தமிழன் குமாரசாமி எஸ்தர், நஞ்சைப்புகளூர் அழகரசன், தமிழ் இசைச் சங்க செயலாளர் கா.ப.பாலசுப்பிரமணியன், பூக்கடை பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தியதோடு, பல்வேறு இலக்கிய தமிழ் அமைப்புகள் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி குறித்து கரூர் திருக்குறள் பேரவையின் நிறுவனத்தலைவரும், தமிழ் செம்மல் விருது பெற்ற மேலை.பழநியப்பன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், அன்னைத்தமிழ் மொழியை முன்னிலைப்படுத்த அனைத்து இடங்களிலும் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும், கடைகள் மற்றும் குழந்தைகளுக்கு தமிழ் பெயர் வைக்க வேண்டுமென்றும், மேலும், வாழ்வியலில் திருக்குறளையும், தமிழையும் முன்னிலைப்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...