Skip to main content

லாப நோக்கில் பள்ளிகளை நடத்தினால் அங்கீகாரம் ரத்து : மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை

லாப நோக்கில் பள்ளிகளை நடத்தினால் அங்கீகாரம் ரத்து என மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு அனுமதி பெற்ற பள்ளிகளை லாப நோக்கில் நடத்தினால் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கந்தர்வகோட்டை தாலுகா பகுதியில் உள்ள 14 அரசு அனுமதி பெற்ற மழலையர் பள்ளி, தொடக்கப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் மாவட்ட கலெக்டர் கணேஷ் அறிவுரையின்படி மாவட்ட கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது பள்ளிகள் பெறவேண்டிய சான்றுகளான தாசில்தார் அனுமதி, கட்டிட உறுதி சான்று, சுகாதாரத்துறை சான்று, தீயணைப்புத்துறை சான்று மற்றும் அரசு அனுமதி உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் பள்ளியில் விளையாட்டு மைதானம், ஒரு வகுப்பில் இரண்டு கதவுகள், மாணவ, மாணவிகள் வந்து செல்ல வாகனங்கள், வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம், பள்ளி கட்டண விவரம், போதுமான கட்டிடங்கள், கழிப்பறை வசதிகள் உள்ளனவா எனவும் ஆய்வு செய்தார்.

ஆய்வுக்குப்பின் மாவட்ட கல்வி அலுவலர் கூறுகையில், லாப நோக்கத்தில் பள்ளிகளை நடத்த திட்டமிட்டால் பள்ளிக்கான அங்கீகார அனுமதியை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...