Skip to main content

கிரிமினல் வழக்கு கொண்ட அதிகம் கொண்ட பிஜேபி வேட்பாளர்கள்’ - அதிர்ச்சி தரும் அறிக்கை!

கர்நாடக தேர்தலில் கிரிமினல் வழக்கு கொண்ட அதிகம் கொண்ட பிஜேபி  வேட்பாளர்கள்’ - அதிர்ச்சி தரும் அறிக்கை!


இதேபோன்று வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டிருக்கும் கிரிமினல் வழக்கு தொடர்பாக ஆராய்ந்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்ததாக ஜனநாயக சீர்திருத்த அமைப்பு தெரிவித்துள்ளது. களத்தில் இருக்கும் 2,560 வேட்பாளர்களில் 391 பேர் தங்களது வேட்புமனுவில், தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதில் முந்துவது பாரதிய ஜனதா கட்சி தான். அக்கட்சி சார்பாக அறிவிக்கப்பட்ட 224 வேட்பாளர்களில் 83 பேர் (37%) தங்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் கட்சி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ள 220 வேட்பாளர்களில் 59 பேர் (27%) மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி வேட்பாளர்களில் 21 சதவிகிதம் பேர் மீதும், ஒன்றுபட்ட ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களில் 20 சதவிகிதம் பேர் மீதும், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களில் 19 சதவிகிதம் பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. சுயேச்சை வேட்பாளர்களில் 10 சதவிகிதம் பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது