Skip to main content

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டது - நீதிபதி கிருபாகரன்

தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டது -அமைச்சர் முன்னிலையில் நீதிபதி கிருபாகரன் பரபரப்பு பேச்சு

தி.மலை: தமிழகத்தில் கல்வித்துறை சீர்கெட்டுவிட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் நீதிபதி கிருபாகரன் சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் 1,56,170 பேர், கடந்த மாதம் 19ம் தேதி 474 மையங்களில் ஒரே நேரத்தில் தமிழ் வாசித்து உலக சாதனை நிகழ்த்தினர். அரசு பள்ளி மாணவர்கள் நிகழ்த்திய உலக சாதனைக்கான அங்கீகார சான்றுகள் ஐகோர்ட் நீதிபதி மற்றும் கல்வி அமைச்சரிடம் வழங்கப்பட்டது. 

இந்த விழாவில் பேசிய நீதிபதி கிருபாகரன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசுப்பள்ளிகளில் கற்பித்தலில் குறைபாடு உள்ளது என்றார். மேலும் மாணவர்களிடம் பேசிய அவர் தவறு செய்வதை தாங்கி பிடிக்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் அது செய்யும் தொழிலுக்கு துரோகம் என்றும் கூறினார்.

Comments

Popular posts from this blog

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.