அமுல், டெய்ரி மில்க் பால் பவுடர் மாதிரிகளில் தரம் குறைவு - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தகவல்
அமுல், டெய்ரி மில்க் பால் பவுடர் மாதிரிகளில் தரம் குறைவு - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தகவல்.
டெல்லியில் அமுல், டெய்ரி மில்க் உள்ளிட்ட பால் பவுடர் மாதிரிகள் தரக்குறைவானவையாக இருந்தது தெரியவந்துள்ளது. செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கடந்த மாதம் 13-ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 165 பால் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
அவற்றில் அமுல், டெய்ரி மில்க் உள்ளிட்ட 21 மாதிரிகள் பாதுகாப்பற்றவையாக இருந்ததாகவும், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிக வேதிப் பொருட்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Comments
Post a Comment