Skip to main content

எத்தனை திவாகரன் வந்தாலும் தினகரனை அசைக்க முடியாது - செந்தில் பாலாஜி

தமிழக அளவில் மூன்று முக்கிய பிரதான சட்டவிரோத செயல்கள் கரூர் மாவட்டத்தில் அரங்கேறி வருகின்றது என முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். 

கரூர் மத்திய நகர அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம், கரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கரூர் மத்திய நகர செயலாளர் கோல்டு ஸ்பாட் ஆர்.எஸ்.ராஜா தலைமையில், நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளருமான வி.செந்தில் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
 
தமிழகத்திற்கு எதிராக மத்திய அரசின் தலையீட்டில் நடைபெற்று வரும், அனைத்து விரோத செயல்களுக்கும், காவிரி மேலாண்மை வாரியம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் உள்ளிட்டவைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில், துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தி வருகின்றதாகவும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சி பொறுப்பேற்று, இயக்கத்தையும் சிறப்பாக வழி நடத்தும் எங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தினை எப்படியாவது முடக்க வேண்டும் என்று டி.டி.வி தினகரனின் உறவினர்களை தற்போது எடப்பாடி பழனிச்சாமி சீண்டி அதன் மூலம், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் திவாகரன் போன்றவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைமுகமாக இயக்கிய நிலையில், தற்போது அனைத்தும் தெரிந்த பிறகு நேரிடையாகவே, இயக்குகின்றார் என்றார். 
 
மேலும் ஒரு திவாகரன் அல்ல, ஒராயிரம் திவாகரன் வந்தாலும், ஒரு பழனிச்சாமி அல்ல, ஒராயிரும் பழனிச்சாமி வந்தாலும் சரி, வருகின்ற தமிழகத்தின் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் வெற்றி பெறுவதோடு, டி.டி.வி தினகரன் முதல்வராவதை யாராலும், தடுக்க முடியாது என்றார். 
 
கரூர் மாவட்டத்தில் மதுபானக்கடைகளின் சந்துக்கடைகள், திருட்டு மணல் லாரிகளில் ஜே.சி.பி மூலம் கடத்துவது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை என்று மூன்று சட்டவிரோத தொழில்கள் தமிழக அளவில் அரங்கேறி வருவதாகவும், இதை நான் அடிக்கடி கூட்டத்தில் சுட்டிக்காட்டி வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் காவல்துறையினர் இது குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மீண்டும் ஆட்சி மாற்றம் வந்து டி.டி.வி தினகரன் முதல்வராக வரும் போது, சட்டவிரோதமாக அரசை ஏமாற்றி, நேர்மையான அவர்களின் செயல்களை செய்யாமல், அதற்கு மாற்றாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு, ஏமாற்றிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மீது தக்க நடவடிக்கை எடுப்போம் என்றும் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மேடையில் பேசினார்.

Comments

Popular posts from this blog

தாடிக்காக வேலை மறுக்கப்பட்ட சீக்கியருக்கு ரூ.6 லட்சம் இழப்பீடு

லண்டன் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்று, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, வேலைக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஜெண்ட் மூலம் நேர்காணல் நடத்தியது. அதில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த சீக்கியர் ராமன் சேதி என்பவரும் கலந்துகொண்டார். அப்போது, அவர் தாடி வைத்திருப்பதாக கூறி வேலைக்கு சேர்க்க அவர்கள் மறுத்துவிட்டனர். இதனால் மனவேதனை அடைந்த ராமன், அங்குள்ள வேலைவாய்ப்பு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிபதி, “நட்சத்திர ஓட்டல் நிறுவனம், வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யும்போது, வேலைக்கு வருபவர்கள் சீக்கியர்களாக இருக்கக்கூடாது என்றோ அல்லது நீளமான முடி, தாடி வைத்து இருக்கக்கூடாது என்றோ எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே, ஓட்டல் நிறுவனம் 7 ஆயிரத்து 102 பவுண்டு (இந்திய மதிப்புபடி சுமார் ரூ.6 லட்சத்து 67 ஆயிரம்) இழப்பீடாக ராமன் சேதிக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார் அந்த இழப்பீட்டு தொகையை இங்கிலாந்தில் உள்ள சீக்கியர் தொண்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்போவதாக பாதிக்கப்பட்ட ராமன் சேதி தெரிவித்தார்.

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை திருவெற்றியூரில் ரூ.200 கோடி செலவில் புதிய மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வேலூ...

சென்னை மாநகர காவல் துறைக்கு குவிகிறது பாராட்டு மழை

ஆர் கே நகரில்  உள்ள ஒரு வீட்டில் இரண்டு பேர் கூரியர் வந்துள்ளதாக கூறி உள்ளே நுழைந்துள்ளனர் சந்தேகமடைந்த பிரீத்தி உடனடியாக காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலி பட்டனை அழுத்த தகவலை பெற்ற அடுத்த 6.நிமிடத்தில் போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு அவர்கள் இருவரையும் கைது செய்தனர் தமிழகத்திலேயே முதன் முறையாக  காவலன் செயலி மூலம் இருவர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது