சென்னை பெரு நகர காவல்துறையின் கஞ்சா விற்பனை செய்த பட்டினபாக்கம் காவல் நிலைய தலைமை காவலர் முத்துகிருஷ்ணன், கைது செய்யபடவில்லை. ஆனால் முத்துகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்.. இந்த செய்தி தொடர்ச்சியை நாளிதழில்களில் இரண்டு நாட்களாக இடம் பெறவில்லை...
3ம் தேதி கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் அருகில் இருக்கும் நெஞ்சாலைத்துறை கட்டிடத்தில் இருந்த விலை உயர்ந்த கணனிகள், பிரிண்டர், ஹார்டு டிஸ்க் உள்ளிட்ட பல பொருட்கள் திருட்டு போய்விட்டது... ஆனால் பல லட்சம் மதிப்புள்ள கணனி திருட்டு போனதற்கு ரூ2.50 - ரூ3 இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருட்டு போனதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
இது தொடர்பான செய்திகள் நாளிதழ்களில் ஏன் வரவில்லை..
நாளிதழ் கிரைம் நிருபர்கள் மெளனம் ஏன்....?? திருட்டு, வழிப்பறி, கொள்ளை, கொலை எது நடந்தாலும் செய்தி வராது... வாழ்க...பத்திரிகை ஜனநாயகம்...
பாலியல் வன்கொடுமை விவகாரம் - செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால் ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...
Comments
Post a Comment