Skip to main content

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அராஜகமாக கைது செய்வது ஜனநாயக விரோத செயல்”  -  மு.க.ஸ்டாலின்

“அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ‘போலீஸ் ராஜ்’ நடத்தி அராஜகமாக கைது செய்வது பண்பாடற்ற ஜனநாயக விரோத செயல்” என கழக செயல் தலைவர்  மு.க.ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

ஜாக்டோ - ஜியோ அமைப்புகளைச் சேர்ந்த தமிழக அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் முறைப்படி நோட்டீஸ் கொடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போகிறோம் என்று அறிவித்தும், எப்போதும் போல அலட்சியம் செய்து, அவர்களை அழைத்துப் பேசாமல் காவல்துறையின் அச்சுறுத்தல் மற்றும் அடக்குமுறை மூலம் "போலீஸ் ராஜ்" நடத்தித் தீர்வு கண்டுவிடலாம் என்று, தீவிரவாதிகளையும் பயங்கரவாதிகளையும் வலைவீசித் தேடுவதுபோல் தேடி, அரசு என்னும் பெரிய குடும்பத்தின் மிகமுக்கிய அங்கமான ஊழியர்களையும், ஆசிரியர்களையும் கைதுசெய்யும் முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் தலைமைச்செயலகத்தை முற்றுகையிடப் போவதாக அறிவித்து, அமைதியான, ஆனால் தீவிரமான போராட்டத்தில், சாலை மறியலில் அரசு ஊழியர்கள், குறிப்பாக பெண் அரசு ஊழியர்கள் எல்லாம் இறங்கி இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் குண்டுக்கட்டாகக் கைது செய்வதும், போராட்டத்தில் கலந்து கொள்ளும் முன்பே சுங்கச் சாவடிகளில் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியும், நள்ளிரவில் அநாகரிகமாக வீடு புகுந்தும், ஜாக்டோ-ஜியோ சங்க நிர்வாகிகளைக் கைது செய்வது பண்பாடற்ற, ஜனநாயக விரோத செயல்.

 

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசு நிர்வாகத்தைத் தாங்கி நிற்கும் தூண்கள் என்பதை இந்த அரசு உணர மறுக்கிறது. நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் எனக்கருதி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அழைத்துப்பேசி சுமுகமான முறையில் தீர்வு காண வேண்டிய துறை அமைச்சர் ஜெயக்குமார், அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்குவதை பத்திரிக்கைகள் மூலம் விளம்பரம் செய்து போராட்டத்தை கொச்சைப்படுத்தி இழிவுபடுத்துகிறார். முதலமைச்சரோ மிக முக்கியமான இந்த அரசு ஊழியர்கள் போராட்டத்தை, காவல்துறையை வைத்துக் கொண்டு துப்பாக்கியையும், தடியையும் காட்டிக் கட்டுப்படுத்தி வழிக்குக் கொண்டு வந்து விடலாம் என்று பகல்கனவு கண்டு கொண்டிருக்கிறார்.

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களே, அரசு ஊழியர்களின் போராட்டத்தை கெடுபிடிகளை ஏவி அடக்கி - ஒடுக்கி விட்டு, பின்னர் கடும் தேர்தல் தோல்வி அடைந்த பாடத்தை “அம்மா புகழ் பாடும்” திரு. எடப்பாடி பழனிசாமியும், அமைச்சர் திரு. ஜெயக்குமாரும் புரிந்து கொள்ளாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஒரு விபரீத விளையாட்டை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாநிலம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கின்ற நேரத்தில், அவர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சி எடுப்பதை விட, வேறு என்ன முக்கியமான வேலை முதலமைச்சருக்கு இருக்கிறது என்பதும் புரியவில்லை.

 

ஆகவே, அடாவடி மற்றும் அராஜக நடவடிக்கைகள் மூலம் இதுபோன்ற போராட்ட உணர்வுகளை அடக்கிவிட முடியும் என்ற தவறான மனநிலையில் இருந்து முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி முதலில் விடுபட வேண்டும். நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் அனைவரின் பிரச்சினைகளுக்கும் ஜனநாயக முறையில் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்ற அடிப்படைச் சிந்தனையுள்ள அரசு ஒன்று இல்லாததால், இன்றைக்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது பணிகளை விட்டு விட்டு, நடுரோட்டில் சாலை மறியல் செய்யும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். பா.ஜ.க.வின் பினாமி அதிமுக அரசின் இந்தப் பிழையான மனோபாவம் முற்றிலும் அராஜகமானது மட்டுமின்றி, ஜனநாயக நாட்டில் இதுபோன்ற அடக்குமுறைகளை அறவே ஏற்றுக் கொள்ளவும் முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

 

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும், தீவிர சாலை மறியல் போராட்டத்தில் மாநிலமெங்கும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு தமிழக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதால், ஜாக்டோ - ஜியோ அமைப்புகளின் நிர்வாகிகளை மாண்புமிகு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமி உடனடியாக அழைத்து நேரடியாக அவரே பேச்சுவார்த்தை நடத்தி, இன்று மாலைக்குள் நல்ல தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். பேச்சுவார்த்தை இணக்கமான சூழலில் நடைபெறுவதற்கு ஏற்ற வகையில், சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகியுள்ள அனைவரையும் தாமதிக்காமல் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.