Skip to main content

திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு இலவசக் கல்வி ..

திருச்சி அருகே, காவிரிக்கரையில், திருப்பராய்த்துறையில், 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதரவற்ற சிறுவர்களுக்கான ஒரு இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த இல்லத்தில், இரண்டு பள்ளிகளும், ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ITI ) நடத்தப்பட்டு வருகிறது…
திருப்பராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண குடிலில் ஆதரவற்ற சிறுவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுவது குறித்து குடிலின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

இந்த ஆசிரமத்தில் ஓர் துவக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆசிரியர்கள் தங்க குடியிருப்புகள் உள்ளன. இங்கு 10- ஆம் வகுப்புத் தேர்வில் தொடர்ந்து 100 சதவிகிதம் தேர்ச்சி உள்ளது. இந்த மாணவர்கள் அரசு ஐ.டி.ஐ.யில் சேர்ந்து தொழிற்பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இங்கு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் மற்றும் இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது.

அத்துடன் 10- ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களை சென்னை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் கல்லூரியில் பாலிடெக்னிக் படிப்பில் சேர்த்து பொறியாளர்களாகவும் ஆக்கப்படுகின்றனர். மேலும், நடப்பாண்டு முதல் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியைத் தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஓவியம், நாடகம், யோகா, கணினி பயிற்சி ஆகிய கலைகளில் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 8 ஆண்டுகளுக்கு முன் தாய், தந்தை இருவருமே இல்லாத சிறுவர்கள் மட்டுமே இங்கு சேர்க்கப்பட்டு வந்தனர். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் தாயோ அல்லது தந்தையோ ஒருவர் மட்டும் இருந்து படிக்க வைக்க இயலாத  ஆண்  குழந்தைகளும் சேர்க்கப்படுகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

இங்கு சேர விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: ஸ்ரீராமகிருஷ்ண குடில், திருப்பராய்த்துறை-639115. திருச்சிராப்பள்ளி மாவட்டம், தொலைபேசி: 0431- 2614235, 0431- 2614548 மற்றும் செல்லிடப் பேசி 9442352770 ஆகியவற்றில் கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடிலின் பள்ளிகளில் சேர்க்கப்படும் சிறுவர்களுக்கு, குடிலில் இருந்து ரூபாய் ஆயிரம் டெபாசிட் அவர்களுடைய எதிர்கால நலனுக்காக செய்து வைக்கப்படுகிறது. அவர்கள் படிப்பு முடிந்து குடிலை விட்டு வெளியே சொல்லும்போது, டெபாசிட்டின் கூடுதல் தொகையையும் சேர்த்து அன்பளிப்பாக வழங்கி அனுப்பி வைக்கப்படுவார்கள்

Comments

Popular posts from this blog

செக் வைக்கும் ஆந்திர முதல்வர்

பாலியல் வன்கொடுமை விவகாரம் -  செக் வைக்கும் ஆந்திர முதல்வர் ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சர் ஆனது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார். பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றார். ஆனால்  ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார். ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் அவர் தெரிவித்தார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு ஆந்திர மாநில மக்கள் பெரும் ஆதரவ...

முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்

தண்டனை! முதியோரை கைவிட்டால் புதிய சட்டம் பாயும்;  மகன் மட்டுமல்ல;  மருமகளும் இனி பொறுப்பு புதுடில்லி: வயதான மாமனார், மாமியாரை பராமரிக்காத, மருமகன், மருமகளுக்கு தண்டனை விதிக்கும் வகையில், பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டத்தில், திருத்தம் செய்யப்பட்டுள்ளது.  இந்த மசோதாவுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா, நடப்பு பார்லி., குளிர்கால கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்பட்டு, நிறைவேற்றப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. உலகில், 60 வயதை கடந்த மூத்த குடிமக்கள் அதிகமாக உள்ள நாடுகளில், இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. 2050-ம் ஆண்டில், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், முதியோர், 20 சதவீதம் இருப்பர் என, கணக்கிடப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினர் பலரும், தங்கள் பெற்றோர் மீது அக்கறையில்லாமல் இருப்பது வேதனைஅளிக்கும் விஷயம். நல்வாழ்வு சட்டம்: பிள்ளைகள் வேலை தேடி, வேறு மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் குடிபெயர்ந்து விடுவதால், மூத்த குடிமக்கள் பலரும், தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 2007ல் நிறை...

எத்திலின் மூலம் வாழைப் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை!

வாழைப்பழங்களை எத்திலின் மூலம் பழுக்க வைக்கும் கடைகளுக்கு அபராதம் விதிப்பதுடன், பதிவு சான்றும் ரத்து செய்யப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை எச்சரித்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையிலுள்ள வாழைப் கடை உரிமையாளர்கள் இடையே எத்தலின் மூலம் பழங்களை பழுக்க வைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மத்திய உணவு பாதுகாப்புத் துறையால் அனுமதிக்கப்பட்ட என்ரிப் (en-rip) மூலம் பழுக்க வைப்பது குறித்தும் அவர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு பாதுகாப்புத் துறை சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், *எத்தலினை பயன்படுத்தும் கடைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.